வந்தே பாரத் ரயிலின் கட்டுமான செலவு ரூ.120 கோடியை எட்டியுள்ளது
2023 ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால், தற்போதைய உற்பத்தி நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் வேகத்தை வைத்து பார்க்கும்போது, குறிப்பிட்ட காலத்துக்குள் சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்ட 75 ரயில்களை இயக்குவது என்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சில புதிய தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தல் பணிகள் காரணமாக 16 பெட்டிகள் கொண்ட ஒரு வந்தே பாரத் ரயிலின் கட்டுமான செலவு தற்போது ரூ.120 கோடியை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு வந்தே பாரத் ரயில் கட்டமைக்க ரூ.106 கோடி செலவானது குறிப்பிடத்தக்கது.