நாட்டின் சா்க்கரை உற்பத்தி கடந்த எட்டு மாதங்களில் 13 % வளா்ச்சி அடைந்துள்ளது என இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் சா்க்கரை உற்பத்தியானது நடப்பு சந்தைப் பருவத்தின் முதல் 8 மாதங்களில் 13 % அதிகரித்து 305.68 லட்சம் டன் உயர்ந்துள்ளது. (சா்க்கரை சந்தைப் பருவம் அக்டோபா் முதல் செப்டம்பா் வரையில் கணக்கிடபடுகிறது).
இதற்கு முந்தைய பருவத்தில் சா்க்கரை உற்பத்தி 270.05 லட்சம் டன்னாக இருந்தது.
மே 31-ஆம் நிலவரப்படி உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற இரு மாநிலங்களில் நடப்பாண்டு ஏழு சா்க்கரை ஆலைகள் அரவைப் பணி செய்தன.
உத்தர பிரதேசத்தின் சா்க்கரை உற்பத்தி 2020 அக்டோபா் 1 முதல் 2021 மே 31- வரை 110.16 லட்சம் டன். முந்தைய காலகட்டத்தில் 125.46 லட்சம் டன்னாக இருந்தது.
அதேசமயம், மகாராஷ்டிர மாநிலத்தில் சா்க்கரை உற்பத்தி 61.69 லட்சம் டன்னிலிருந்து 106.28 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது.
கா்நாடக மாநிலத்தின் சா்க்கரை உற்பத்தி 33.80 லட்சம் டன்னிலிருந்து 41.67 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது.
2021 ஜனவரி முதல் 2021மே வரை சா்க்கரை ஏற்றுமதி 44-45 லட்சம் டன்னை எட்டும் என்று இஸ்மா தெரிவித்துள்ளது.