பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எலக்ட்ரிக் வாகனங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் தாக்கத்தின் மூலம் மக்கள் உடல் உழைப்பை மறந்துவரும் சூழலில் குறைந்த பட்ஜெட்டில் நல்ல எலக்ட்ரிக் சைக்கிள்களை வாங்கலாம். அவற்றில் சில உங்களுக்காக…
ஸ்கெல்லிங் புரோ (Skellig pro) : இங்கிலாந்து நிறுவனமான கோசீரோ. இந்தியாவில் பல வகையான எலக்ட்ரிக் சைக்கிள்கள அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று ஸ்கெல்லிங் புரோ. ஒரே சார்ஜில் 70 கி.மீ வரை நீடிக்கும் 250W சக்தி கொண்ட மோட்டாரை கொண்டுள்ளது. இந்த மிதிவண்டியில் 7 ஸ்பீடு மைக்ரோஷிஃப்ட் கியர் மற்றும் இரட்டை வட்டு பிரேக் உள்ளது. இதன் விலை சுமார் ரூ .39,999 ஆகும்.
ரோட்லர்க் (Roadlark) : எலக்ட்ரிக் சைக்கிள் நிறுவனமான நெக்ஸு மொபிலிட்டி எலக்ட்ரிக் சைக்கிள் ரோட்லார்க்கை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. ஒருமுறை சார்ஜ் செய்தாலே இந்த சைக்கிள் 100 கி.மீ தூரம் பயணிக்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், பேட்டரி வெளியேற்றப்பட்ட பிறகும், நீங்கள் அதை பெடல்கள் வழியாக இயக்கலாம். இது இரட்டை பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் விலை 42,000 ரூபாய் ஆகும்.
ஹீலியோ எம் 100 (Heileo m100) : பெங்களூரைச் சேர்ந்த டவுட்ச் (Toutche) நிறுவனம் தனது மின்சார சைக்கிள் ஹெய்லியோ எம் 100-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார மிதிவண்டியின் வரம்பு 60 கி.மீ. இதன் பேட்டரி 0.37kWh திறன் கொண்டது. அதில் வரம்பை அதிகரிக்க ஒரு வழி உள்ளது. இதற்காக, நீங்கள் பேட்டரியை அப்கிரேடு செய்ய வேண்டும். இதன் விலை சுமார் 49,900 ரூபாய் ஆகும்.