எக்ஸிகியூட்டிவ் செடான் கார் வகைகளில் அதிக வரவேற்பை பெற்ற ஸ்கோடா ஆக்டேவியா இப்போது 4ம் தலைமுறை மாடல் ஒன்றை சிறப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஜுன் 10ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா அனுப்பியுள்ள செய்தியில் காரின் விலை ரூ.27.50 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை எ்க்ஸஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம். .
புதிய ஆக்டேவியா, போக்ஸ்வேகன் குழுமத்தின் MQB EVO என்ற கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் வீல்பேஸ் நீளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதன் கேபினில் கூடுதல் இடவசதி கிடைக்கும். எல்இடி லைட்டுகள், டெயில் லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் மேலும் அழகு சேர்க்கின்றன.
1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.