உலகின் முதல் ஒழுங்குப்படுத்தப்பட்ட கிரிப்டோகரன்சி PNP COIN நம்பிக்கை தரும் வர்த்தகம்
வணிகம், வர்த்தகம் சார்ந்த நூல்களை நாம் படிக்க நேர்ந்தால் கண்டிப்பாக கிரிப்டோகரன்சி என்ற வார்த்தையை பார்க்காமல் இருக்க முடியாது. அறிவியல் கண்டுபிடிப்புகளைப் போலவே பொருளாதார நிலையிலும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு உலக வர்த்தகத்தை இட்டுச் செல்கிறது. அந்த வகையில் பண்டமாற்று முறையின் பரிணாம வளர்ச்சி தான் இன்று கிரிப்டோகரன்சியில் வந்து நிற்கின்றது.
கரன்சியின் கதை
கிரிப்டோகரன்சியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் கரன்சியின் (பணம்) வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பகட்டத்தில் மனிதர்கள் பண்டமாற்று முறையின் மூலமாகவே வர்த்தகம் செய்துவந்தனர். அதன் பின்னர் தங்கம், வெள்ளி போன்ற அரிதான உலோகங்களை மையமாக கொண்டு பண்டமாற்று முறை பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தது. இந்த நாணயத்தின் மதிப்பு, நாணயம் தயாரிக்க பயன்படுத்திய உலோகத்தின் மதிப்பாக கொள்ளப்பட்டது.
உலோக நாணயங்களை பெருமளவில் தயாரிக்க முடியாத காரணத்தினால் ஒப்புறுதியளிக்கப்பட்ட காகித முறை (காகித பணம்-APPROVED PAPER METHOD) உருவாக்கப்பட்டது. இதனை ஒவ்வொரு நாட்டின் அரசும் தாங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பிற்கேற்ப அச்சடித்து வினியோகிக்கப்பட்டது. பின்னர் 17ஆம் நூற்றாண்டில் அந்நிய செலவாணியை மையமாகக்கொண்டு தங்களுடைய பணத்தின் மதிப்பை உலக நாடுகள் நிர்ணயித்து கொண்டது. இதன் விளைவாக உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் வரம்பற்ற முறையில் பணம் அச்சடிக்கும் சக்தியைப் பெற்றது. ஆனால் அதிக எண்ணிக்கையில் பணம் அச்சடிக்கும் பொழுது வர்த்தகத்தில் அதன் மதிப்பு சரிந்து விடும். வெனிசுலா போன்ற நாடுகளின் இன்றைய நிலைமை இது. எடுத்துக்காட்டாக 2010ல் 1 ரூபாயின் மதிப்பு 0.09569 போலிவேரிலிருந்து BOLIVAR), 2021ல் 1 ரூபாயின் மதிப்பு 28 கோடி போலிவேராக உள்ளது.
வீடியோ லிங்:
ஒரு உலகம் ஒரே பணம் : கிரிப்டோகரன்ஸி
தற்போது பணம் மேலும் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி பயணிக்கிறது. அதுதான் மெய்நிகர் நாணயம் அல்லது டிஜிட்டல் நாணயம் என்கிற கிரிப்டோகரன்சி. நம் கையில் இருக்கும் கரன்சி நோட்டுகளை போலத் தான் இதுவும். ஆனால் இது டிஜிட்டல் வடிவ கரன்சிகளாக இருக்கும். ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் அந்த நாட்டில் மட்டுமே செல்லத்தக்கதாகும். ஆனால் இந்த கிரிப்டோகரன்சிகள் உலகம் முழுக்க செல்லத்தக்கவையாகும். இதற்கு தேவையானது இணைய இணைப்பு. இதன் மூலம் பரிவர்த்தனை களை மேற்கொள்ளலாம். இது கட்டச்சங்கிலி (BLACK CHAIN) என்கிற மறைகுறியாக்கப்பட்ட (ENCRYPTED) மற்றும் பரவலாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டது.
உலகின் முதல் கிரிப்டோகரன்சி
“சடோஷி நகமோடோ” என்கிற முகம் தெரியாத ஒருவரால் 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த பிளாக்செயின் டெக்னாலஜி. இதன் மூலம் பிட்காயின் என்கிற முதல் கிரிப்டோகரன்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் 72 ரூபாயில் வர்த்தகமாகி கொண்டிருந்த ஒரு பிட்காயின் தற்பொழுது 50 லட்சத்தை தொட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது டெதர், போல்காடாட், லைட் காயின், எதீரியம் என்று சுமார் 7000 கிரிப்டோகரன்சிகள் சந்தையில் உள்ளன. இந்த பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் பணபரிவர்த்தனைக்கான வரவு செலவு கணக்குகளை இடைநபர் இல்லாமல் கணினி சர்வரில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதை பெறுபவர் மற்றும் அனுப்புபவர் மட்டுமே அணுக முடியும். இதனால் இதன் பாதுகாப்பைப் பற்றி மக்கள் பயப்படத் தேவையில்லை. இதன் மூலமாக கிரிப்டோகரன்சியின் ஒத்த போலிகளை யாரும் உருவாக்க முடியாது. இந்த நாணயத்தின் மதிப்பை எந்த ஒரு அரசாங்கத்தாலும் நிர்ணயம் செய்ய முடியாது. அதாவது, ஒரு நாட்டின் வர்த்தக வீழ்ச்சியால் இந்த நாணயத்தின் மதிப்பு சரிந்துவிடாது.
கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு
இணையத்தில் பல கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இவை அனைத்துமே இணையத்தில் மட்டுமே உருவாக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் இவற்றை வாங்குவது என்பது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை போன்றதுதான். கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு அதன் பயன்பாட்டை ஒத்ததாகும். எடுத்துக் காட்டாக ஈதர் என்கிற கிரிப்டோகரன்சி மூலம் எதீரியம் நெட்வொர்க்கில் பணபரிவர்த்தனை, ஷேர் மார்க்கெட் வர்த்தகம், பணம் சேமிப்பு, இன்சூரன்ஸ், கிரவுட் ஃபண்டிங் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். தற்பொழுது அமேசான் நிறுவனம் கிரிப்டோகரன்சிகளை பெற்று சேவைகளையும், பொருட்களையும் மக்களிடம் பரிவர்த்தனை செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. இது கிரிப்டோகரன்சி மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுசேர்க்கிறது. ஆனால், அடிப்படையில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கென எந்த மதிப்பும் கிடையாது. அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றன என்பதுதான் அவற்றின் ஒரே மதிப்பு. எப்போது இதன் மீதான நம்பிக்கை மக்களிடத்தில் குறைய ஆரம்பிக்கிறதோ அப்போது அதன் மதிப்பு குறைந்துபோகும். கிரிப்டோகரன்சிகள் தான் பணத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சி என்று மக்கள் கருதும் நிலை இப்பொழுது வந்திருக்கிறது. ஆனால் இது அன்றாட பரிவர்த்தனைக்கு பயன்படும் வகையில் உறுதி பெறுவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.
வீடியோ லிங்:
கிரிப்டோகரன்சி சிக்கல்கள்
எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இந்த கிரிப்டோகரன்சிகள் வருவதில்லை என்பதால் மாஃபியாக்கள், போதை மருந்து வியாபாரிகள், ஆள் கடத்தல் அடியாட்கள் போன்றவர்களின் அண்டர்கிரவுண்ட் ஆட்டங்களுக்கு உதவலாம். பரிவர்த்தனைகள் முகமற்றவை என்பதால் இதை யார் வாங்குகிறார்கள், தனியாரா, நிறுவனங்களா போன்ற எதுவும் யாருக்கும் தெரியாது.
மாயமான ஸ்க்விட் (SQUID)
கிரிப்டோகரன்சி சந்தையில் ஸ்க்விட்(ஷினிஹிமிஞி) என்ற பெயரில் வெளியான மீம் காயின் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்தது. கடந்த அக்டோபர் 26ஆம் தேதி ஸ்க்விட் கிரிப்டோ வெறும் 0.012 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் 230000% உயர்ந்து 2,861.80 டாலர் வரையில் உயர்ந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தக் கிரிப்டோ உரிமையாளர்கள் கிரிப்டோவை விற்பனை செய்து விட்டு மாயமாகிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் இந்த ‘ஸ்க்விட் கிரிப்டோகரன்சி’ மோசடி என அறிவிப்பு வெளியானக் காரணத்தால் ஸ்க்விட் கிரிப்டோ விலை 100 சதவீதம் இறங்கி தற்போது 0.0031 டாலராகச் சரிந்துள்ளது. இதுபோன்ற மோசடிகளை தடுக்க கிரிப்டோகரன்ஸி வரைமுறைப்படுத்தல் அத்தியாவசியமானதாக உள்ளது.
உலகில் முதல் வரைமுறைபடுத்தப்பட்ட கிரிப்டோகரன்ஸி Helios PNP Coin
உலகிலேயே முதன்முறையாக நெறிமுறைக்குட்பட்ட கிரிப்டோகரன்ஸியை ஹாங்காங்கை மையமாகக்கொண்டு செயல்படும் `ஹீலியோஸ் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம்’ தங்களின் `PNP‘ காயினை அறிவித்துள்ளனர். மற்ற காயின்கள் யார் வாங்குவது, யார் விற்பது என்ற எந்த வரைமுறையும் இருக்காது. ஆனால், இந்த PNP காயின் வாங்க KYC தகவல்கள் கட்டாயம் என்பதால் நம்பிக்கையாக வாங்கலாம். கடந்த மே மாதம், 10 ரூபாயாக இருந்த PNP காயினின் மதிப்பு தற்போது ரூ.27.05 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது 60 லட்சம் காயின்களை மட்டுமே இப்போது சந்தையில் விட இருக்கிறது ஹீலியோஸ். மேலும், ஒருவர் குறைந்தபட்சம் 1000 (ரூ.27,050 தேவைப்படுகிறது) காயின்கள் முதல் அதிகபட்சம் 50,000 காயின்கள் மட்டுமே வாங்க முடியும் என்று ஒரு நெறிமுறையை வகுத்துள்ளது. இதனால், அனைவரும் இதில் முதலீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் முதலீடு செய்யப்படும் பணம் பலதரப்பட்ட வியாபார முதலீடுகளுக்கு பயன்படுகிறது. அந்தந்த வியாபாரங்களின் வேகமான வளர்ச்சியைப் பொறுத்து PNP காயின் வைத்திருப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று ஹீலியோஸ் தெரிவிக்கிறது. மே 2022-ல் PNP காயின், கிரிப்டோ டிரேடிங் எக்ஸ்சேஞ்களில் விடப்படும் என்று ஹீலியோஸ் தெரிவித்துள்ளது.
வீடியோ லிங்:
PNP COIN ஸ்மார்ட் முதலீடு தான்
2023-ல் பிட்காயினின் 1% சந்தை மதிப்பை PNP எட்டும் என்று நம்பப்படுகிறத்து. “இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கான வரைமுறை கொண்டு வந்தால், இதன் மதிப்பு நன்றாகவே உயரும். அதனால், நீங்கள் இப்பொழுதே PNP
காயினை வாங்கி வைப்பது உங்களுக்கு ஸ்மார்ட்டான ஒரு முதலீடாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த PNP காயின் வாங்கும்போது உங்களுக்கு ஒரு பிசிகல் (Physical) காயின் மற்றும் அதனுடன் ஒரு PNP கார்டும் கொடுக்கிறோம். நீங்கள் வைத்திருக்கும் காயின் மதிப்பு உயர உயர, அது நீங்கள் வைத்திருக்கும் கார்டில் அப்டேட் ஆகிடும். எதிர்காலத்தில் இந்த கார்டை டெபிட் கார்டு மாதிரியும் பயன்படுத்தும் வசதி வரப்போகிறது. இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் நெறிமுறைக்குட்பட்டவையாக இருக்கும்” என்கிறது ஹீலியோஸ். மேலும், `கிரிப்டோகரன்ஸிகளை வாங்குபவர்களின் ஆதார் எண், பான்கார்டு எண், வங்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, இ-சிக்னேச்சர் செய்த பின்னரே PNP காயினை வாங்க முடியும். இதனால் முறையற்ற பணப்பரிவர்த்தனை, கருப்புப் பணத்தை முதலீடு செய்வது போன்றவை தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவும் கிரிப்டோகரன்சியும்
இந்தியாவில் தற்போது ஒன்றரைக்கோடிபேர், இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கிரிப்டோ கரன்ஸி வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. உலக அளவில் அதிக கிரிப்டோ கரன்சி வாங்குவதில் வியட்நாமுக்கு அடுத்த இடத் தில் இந்தியா இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக் கின்றன. அதே வேளையில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு பணம் அனுப்பி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதை அந்நிய செலாவணி சட்டம் அனுமதிக்கவில்லை.
இந்தியாவில் செயல்படும் வங்கிகள் கிரிப்டோகரன்சிகளோடு வணிகம் மேற்கொள்ளக்கூடாது என 2018ஆம் ஆண்டு ஆர்பிஐ தடை விதித்தது. இந்த தடையை 2020ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து கிரிப்டோகரன்ஸி எக்ஸ்சேஞ்களின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்தது.
உலக நாடுகளின் மக்கள் தொகையின் அடிப்படையில் எத்தனை பேர் கிரிப்டோ
கரன்சியில் முதலீடு செய்துள்ளனர் என ‘ஙிக்ஷீஷீளீமீக்ஷீ சிலீஷீஷீsமீக்ஷீ’ என்ற நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி, உக்ரைன் நாட்டில் 12.73% மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து முதலிடத்தில் இருப்பதாகவும், அடுத்தடுத்த இடங்களில் ரஷ்யா (11.91%), கென்யா (8.2%) மற்றும் அமெரிக்கா (8.31%) ஆகிய நாடுகள் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. இந்தியாவில் சுமார் 1.5 கோடி பேர் இதில் பணம் போட்டிருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐயின் 2018 உத்தரவை குறிப்பிட்டு கிரிப்டோகரன்சி வணிகம் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஆலோசனையை கடைபிடிக்க தவறினால் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தது.
கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்துவதற்கு எதிராக எஸ்பிஐ உள்ளிட்ட சில முன்னணி வங்கிகள் மக்களை எச்சரித்த நிலையில், வங்கிகளுக்கு ஆர்பிஐ ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “2018ல் வெளியான ஆர்பிஐ உத்தரவை மேற்கோள்காட்டி வாடிக்கையாளர்களை எச்சரிக்கக் கூடாது என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு அந்த சுற்றறிக்கை இனி செல்லுபடியாகாது” எனவும் தெரிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சிக்கான வரவேற்பை கண்ட உலக நாடுகளில் பலவும் தங்கள் நாட்டிற்கென தனியாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சீனா, அனைத்து கிரிப்டோகரன்ஸிகளையும் தடை செய்துள்ளது. அதற்கு மாற்றாக அரசாங்க டிஜிட்டல் கரன்சிகளை பிட்காயின்களுக்கு நிகராக உருவாக்கி வருகிறது. சீனாவைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவும் சொந்த டிஜிட்டல் கரன்சிகளை அறிமுகப்படுத்த தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கு எந்த ஒரு சட்டமும் இல்லை ஆனால் வெகுவிரைவில் இந்தியாவும் தனது டிஜிட்டல் கரன்சியை உருவாக்க தேவையான நடவடிக்கையினை எடுத்து வருகிறது. “ரிசர்வ் வங்கி தனது முதல் டிஜிட்டல் கரன்சியின் சோதனை திட்டங்களை வரும் டிசம்பர் மாதத்துக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், டிஜிட்டல் கரன்சி முழுக்க முழுக்க புதிய பொருள் என்பதால் மிக கவனமாக செயல்பட வேண்டியிருப்பதாக” ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தாதாஸ் தெரிவித்துள்ளார்.