கலையுணர்வுடன் செய்யும் தொழில்கள்
- ஸ்க்ரீன் பிரின்ட்டிங், ஃபேப்ரிக் பிரின்ட்டிங் போன்ற தொழில்கள் தொடங்க அதிகம் முதலீடு தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு வார பயிற்சி போதும். ஸ்க்ரீன் பிரின்ட்டிங்கில் பொதுவாக விசிட்டிங் கார்டுகள், திருமண அழைப்பிதழ்கள் என்று பிசியாகவே இருக்க முடியும். ஃபேப்ரிக் பிரின்ட்டிங்கைப் பொறுத்தவரை பெண்களுக்கான உடைகள் விற்கும் கடைகளோடு நல்ல தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும்.
- ஓவியம், கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா? பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் அதன் உதவி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுடன் மின்னஞ்சல், கடிதம் வழியாகத் தொடர்பு கொண்டு வாய்ப்புக் கேட்டு முன்னேறலாம்.
- ‘கிளாஸ் பெயின்ட்டிங்’ இப்போது மிகவும் பாப்புலர். நல்ல கவன சக்தி இருந்தால் போதும் கண்ணாடி பெயின்ட்டிங்கில் கலக்கலாம். இன்ட்டீரியர் டிசைனரோடு தொடர்பில் இருந்தால் வாய்ப்புகள் தேடி வரும்.
- ஃபேஷன் ஜுவல்லரி உருவாக்குவது இப்போதைக்கு சூப்பர் பிசினஸ். வேலையில் இருக்கும் பெண்கள்கூட ஓய்வு நேரங்களில் இதில் இறங்கி காசு பார்க்கிறார்கள். இதற்கான பயிற்சி நிலையங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. நகரங்களில் இதற்கென தனிக் கடைகள் உள்ளன.
- ஃபேஷன் டிசைனிங்… வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலை. நல்ல கற்பனை வளமும், உலக ஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம். ரெடிமெடு ஆடை நிறுவனங்களில் நிறைய வாய்ப்பு உள்ளது.
- வீட்டு ஜன்னல்களுக்கு அழகழகாக காட்டன் செய்து போடுவது ஒரு நல்ல கலை. சிறப்பாக வடிவமைக்க முடிந்தால்… அது ஒரு நல்ல தொழிலாகிவிடும். கொஞ்சம் டெய்லரிங், கொஞ்சம் கலையுணர்வு இரண்டும் இருந்தால்… நிறைய சம்பாதிக்கலாம்.