ஒரு தொழிலை தொடங்கும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…
- இந்த தொழிலில் உற்பத்தி செய்யும்பொருள்/சேவையை நுகர்வோர் யார் என்பது முதலாவதாக அறியப்படவேண்டும்.
- இந்த தொழிலில் போட்டி எவ்வளவு இலாபகரமானதா, தொழில்நுட்பம் அடிக்கடி மாறக்கூடியதா, அதற்கு தேவையான உள்ளீட்டு பொருட்கள் சுலபமாக கிடைக்கிறதா, திறம்வாய்ந்த தொழிலாளர்கள் கிடைப்பார்களா என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணவும்.
- எந்த மாநிலத்தில் எந்த ஊரில் தொடங்கினால் அரசு உரிமம் (Licence if any) சுலபமாக கிடைக்கும்? தேவையான நிலம் நியாயமான /மலிவு விலையில் கிடைக்குமா, மின்சாரம் தண்ணீர் தங்குதடையின்றி கிடைக்குமா, பொருட்களை சந்தைக்கு கொண்டுசெல்ல சாலை/போக்குவரத்து வசதிகள் உண்டா, கழிவுகளைஅகற்றவசதிகள்உண்டா, வரி விகிதங்கள் என்ன, தொழிலாளர்கள் தங்க வீடுகள் கிடைக்குமா போக்குவரத்து வசதிகள் உண்டா என்பன போன்ற தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யவும்.
- அந்த மாநில மாவட்ட தொழில்மையத்தை அணுகி அரசு சலுகைகள் என்ன உதவிகள் என்ன என கலந்தாலோசிக்கவும்.
- அந்த மாநிலத்தில் ஊழல்/கையூட்டு அதிகமிருப்பதால் தொழிலை பாதிக்கும் அதை கவனத்தில் கொள்ளவும்
- GST வரி என்ன அரசு அறிக்கை சமர்ப்பிக்க சொல்லும் போதுஅரசின் செயலற்ற நடைமுறைகளுக்காக தொழில்முனைவோரான நீங்கள் செலவிட வேண்டிய தொகை எவ்வளவு? என்ற தகவல்களை திரட்டவும்.
- அடுத்து திட்டஅறிக்கை எதிர்கால வரவு-செலவு மாதிரி அறிக்கை தயார் செய்யவும். எவ்வளவு முதலீடு கடன் தொகை எவ்வளவு எந்த வங்கி கடன்அளிக்க போகிறது என்ற தகவல்களை முடிவு செய்யவும்.
- ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் தாக்குப்பிடிக்கும் திறன் உண்டா என்பதை தீர்மானிக்கவும்.
- தனிநபர் வணிகமா, கூட்டுவர்த்தகமா, கம்பெனியா என உங்களுக்கேற்ற அமைப்பை இறுதி செய்யவும்.
- இந்த வணிகத்தில் மேலாண்மை தேரிந்தவர் யார்? இத்தனை கேள்விகளுக்கு விடை கண்டு தகவல்களை திரட்டி அறிக்கைகளை தயாரித்து அரசு/வங்கிகளுட ம் பேசி தொழில் தொடங்கும் நடைமுறைக்கு வரலாம்.