நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடிப்பதற்கான தகுதியும், திறமையும் நம்மிடம் முழுமையாக இருக்கிறது என்று நம்புவது சுயநம்பிக்கை ஆகும்.
இந்த வகை நம்பிக்கை என்பது ஒருவருக்குக் கட்டாயம் தேவைப்படும் ஒரு விஷயம். அதிலும் பிசினஸ்மேனுக்கு இது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
முகமது அலி ஒரு குத்துச்சண்டைக்கு தயாரானாலும் சரி, பணிக்கு சேருவதற்கான நேர்காணலுக்கு செல்லும் ஒரு நபரானாலும் சரி, அந்த விஷயத்தில் என்ன மாதிரியான விளைவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதை நடத்திக்காட்டுவார். அது தான், அவரிடம் இருக்கும் சுயநம்பிக்கை.