வங்கிக்கணக்கிலிருந்து பணம் பறிபோக இதுவும் ஒரு காரணம்
முகநூலில் அதிக லைக் வேண்டும் என்பதற்காக பலரையும் தங்கள் நட்பு வட்டாரத்திற்குள் வைத்துக் கொள்வார்கள். அத்தகையோர் தான் ஹேக்கர்களுக்கு தேவையாகிறது. ஹேக்கர்கள் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்று, அதன் மூலம் அவர்கள் வருமான வரித்துறையின் இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிப்பதன் மூலமாக உங்கள் அலைபேசி எண் மற்றும் பான்கார்டு நம்பரை பெற்று கொள்வார்கள்.
அதன் பின்னர், காவல் நிலையத்தில் மொபைல் திருட்டு போய்விட்டதாக புகார் பதிவு செய்து, அந்த புகார் நகல் மற்றும் பான்கார்டு மூலம் அவர்கள். மற்றொரு சிம்கார்டை மொபைல் கம்பெனியில் இருந்து பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் பெற்ற சிம்கார்டு மூலமாக இன்டர்நெட் பேங்கிங் வாயிலாக தற்போது அவர்களுக்கு உங்கள் பேங்க் அக்கவுன்டை அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.பின்பு பேங்க் அக்கவுண்ட் இணைய முகவரிக்கு சென்று “Forgot my Password” தேர்வினை கிளிக் செய்வார்கள்.
அவ்வளவு தான். இனி உங்கள் வங்கி சம்பந்தப்பட்ட அனைத்தும் அவர்கள் கைவசம். இனி உங்கள் வங்கிக் கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் பணம் காணாமல் போகும். காரணம் ஹேக்கர்களின் திருவிளையாடல் தான். எனவே முகநூலில் பிறந்த நாள், செல் நம்பரை பதிவிட வேண்டாம் என்றும், ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதை மறைத்து விடுங்கள் என்றும் சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.