திருச்சியில் கல்யாண சீர்வரிசை பொருட்கள் ஒரே இடத்தில்… குறைந்த விலையில்….
தற்போதைய, வேகமாக ஓடிக் கொண்டிருக்கக் கூடிய வாழ்வியல் சூழலில் முன்பு போல் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக தேடி வாங்குவதை மக்கள் விரும்புவதில்லை. “ஆல் இன் ஒன் ரூப்” என்று கூறுவார்களே.. அது போல், ‘ஓரே இடத்தில் அனைத்து பொருட்களும் எங்கு தரமாக கிடைக்கிறதா அங்கேயே பொருட்களை வாங்குவோம்’ என்பதே மக்களின் மனநிலையாக இருக்கிறது.
அத்தகையோரின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு இடமாக உள்ளது திருச்சி, வயலூர் செல்லும் சாலையில், சோமரசம்பேட்டையில் உள்ள சூசையப்பர் பர்னிச்சர் மார்ட். இதன் உரிமையாளர் ஸ்டீபன் நம்மிடம் கூறுகையில்,
“கடந்த 30 ஆண்டுகளாக என்னுடைய அப்பா இந்த பர்னிச்சர் தொழிலை செய்து வருகிறார். அவரது தொடர்ச்சியாக தற்போது நானும் இந்த தொழிலை செய்து வருகிறேன். சூசையப்பர் பர்னிச்சர் என்றாலே மக்களிடம் ஒரு நன்மதிப்பு உள்ளது. அதற்கு காரணம் இங்கு செய்யக்கூடிய பர்னிச்சர்கள் அனைத்தும் எங்களுடைய சொந்த தயாரிப்பு.
அது எங்களுடைய தனிச் சிறப்பும் கூட. எங்கள் கடை ஆரம்பித்தற்கான நோக்கம், திருமணத்திற்கு தேவையான அனைத்து பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை மக்கள் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே. அந்த வகையில் எங்களிடம் கல்யாணத்திற்கு சீர்வரிசையாக கொடுக்கக் கூடிய குத்து விளக்கு, பாத்திரம், வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், தொலைக்காட்சி, எலக்ட்ரானிக் பொருட்களும் டைனிங் டேபிள், பூஜை அறை, பீரோக்கள் மற்றும் கட்டில்கள் என அனைத்தும் உள்ளன.
வாடிக்கையாளரின் பட்ஜெட்டிற்கு ஏற்றார் போல் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை சீர்வரிசை பொருட்களை பேக்கேஜாக வழங்குகிறோம்.
கட்டில்களை பொறுத்தவரை யில் ஆரம்பத்தில் குறைந்த அளவிலான வடிவமைப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால் நாளுக்கு நாள் மக்கள் வெளியே பார்ப்பது, சோசியல் மீடியாக்களில் என பல்வேறு விதங்களில் கட்டில்கள் அவர்கள் கண்ணில்படுகிறது. அந்த வடிவத்தை அப்படியே எதிர்பார்ப்பார்கள். அது போன்ற கஸ்டமைசிடு கட்டில்களை செய்து கொடுக்கிறோம். எங்களிடம் 20க்கும் மேற்பட்ட வடிவங்களில் கட்டில்கள் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கிறோம்.
விற்பனைக்கு பின்னான சேவையில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். பர்னிச்சர்களை தவறாக கையாள்வ தாலோ, பிற காரணங்களாலோ ஏற்படும் பழுதுகளை நாங்களே நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று சரி செய்து கொடுக்கிறோம். எங்களுடைய சொந்த தயாரிப்பு என்பதால் பர்னிச்சர் விலைகளை நாங்கள் பெரும்பாலும் உயர்த்துவதில்லை. உதாரணமாக, ஏழு வருடத்திற்கு முன்பு 15 ஆயிரத்திற்கு கொடுத்த கட்டிலின் விலை தற்போதும் அதே 15 ஆயிரத்திற்கே கொடுக்கிறோம்.
வீடியோ லிங்:
எங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். இதுவரை நாங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்தது இல்லை, ஆனால் வாங்கிச் சென்றவர்கள் அடுத்தவர்களிடம் பரிந்துரைக்கும் அளவிற்கு தொடர்ந்து சிரத்தை எடுத்து ஒவ்வொரு பொருளையும் நேர்த்தியாக செய்து கொடுக்கிறோம். அதுவே எங்களுடைய பெரிய விளம்பரமாக கருதுகிறோம்
. தற்பொழுது வரை எங்களுக்கான புதுப்புது வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். வாடிக்கையாளர்களின் மனநிறைவே எங்களின் வெற்றி” என்றார்.
தொடர்புக்கு: 88703 95778