1000 ஏக்கரில் உலகின் மெகா எக்ஸ்போ ரூ.450 கோடி செலவில் இந்திய அரங்கம் ஒரு முறை சுற்றிப்பார்க்க கட்டணமோ ரூ.20 ஆயிரம்
1000 ஏக்கரில் உலகின் மெகா எக்ஸ்போ ரூ.450 கோடி செலவில் இந்திய அரங்கம் ஒரு முறை சுற்றிப்பார்க்க கட்டணமோ ரூ.20 ஆயிரம்
துபாய் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி அக்டோபரில் தொடங்கி வருகிற 2022 மார்ச் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகின் பிரம்மாண்டமான இந்த கண்காட்சி அபுதாபிக்கும் துபாய்க்கும் நடுவே ஒரு பெரிய பாலைவனத்தையே கையகப்படுத்தி 1,083 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. “வாய்ப்பு, இயங்குதல் மற்றும் நிலைத்தன்மை” என்ற கண்ணோட்டத்துடன் கட்டமைப்படும் இக்கண்காட்சிக்கென ஒரு நகரத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலக கண்காட்சியில் இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்கிறது. ஒவ்வொரு நாடும் தங்களின் கலை, கலாசாரம், தொழில், அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், எதிர்கால சிந்தனைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், அதனை மேம்படுத்தவும் இந்த கண்காட்சி உதவுகிறது.
இந்தியா, உலக கண்காட்சி வளாகத்தில் ரூ.450 கோடி செலவில் அரங்கம் அமைத்துள்ளது. 4,800 சதுரடி பரப்பளவில் திறன், வர்த்தகம், பாரம்பரியம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் என 5 அம்சங்கள் நிறைந்த காட்சியமைப்புகள் கொண்டும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திய அரங்கில் உணவு விழாக்கள், கலாச்சார, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
கண்காட்சியை ஒருமுறை பார்வையிட நபர் ஒருவருக்கு 95 திர்ஹாம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (இந்திய மதிப்பில் ஒரு திர்ஹாம் ரூ.20,096 – சமீபத்திய மதிப்பு) இதுவே, 6 மாதத்திற்கான அனுமதி சீட்டு பெறுவதற்கு 495 திர்ஹாம் செலுத்தினால் போதுமானது. இந்த கண்காட்சி சுமார் இரண்டரை கோடி மக்கள் பார்வையிடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.