ஜிஎஸ்டி படிவம் தாக்கல் : புது சிக்கல்..!
ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் அனைத்து நிறுவனங்களும் வரி அறிக்கையுடன் நிஷிஜிளி-9சி படிவத்தை பட்டய கணக்காளரின் சான்றளிப்புடன் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றி சுய சான்றளிக்கப்பட்ட படிவத்தை தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜிஎஸ்டிஆர் படிவம்1-ஐ 11ம் தேதி தாக்கல் செய்யாமல் பொறுமையாக தாக்கல் செய்தால் ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தில் அதற்கான அபராதத்தை தொகை காட்டும். மேலும் கடந்த மாத 3பி தாக்கல் செய்யாமல் இந்த மாத படிவம் 1ஐ தாக்கல் செய்ய முடியாத நிலையை மத்திய அரசு வகுத்துள்ளது.
எனவே காலதாமதத்துடன் ஜிஎஸ்டி தாக்குதல் சிக்கலுக்கு வழிவகுக்கும் என வரித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.