ஆதார் – பான்கார்டு இணைப்பு வருமானவரித்துறை புதிய உத்தரவு
பான்கார்டு மூலம் நடைபெறும் வருமான வரி ஏய்ப்பு, வங்கிக் கடன் மோசடி உள்ளிட்டவைகளை தடுக்க மத்திய அரசு பான்கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு கட்டாயமாக்கியிருந்தது. இணைப்பிற்கான கால அவகாசம் பல்வேறு நிலைகளில் நீட்டிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2020 கொரோனா பாதிப்பை தொடர்ந்து இணைப்பிற்கான தேதி கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி எனவும் இணைக்கப்படாதோர்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் எனவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா 3வது அலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு ஆதாருடன் பான்கார்டு இணைப்பிற்கான தேதியான வருகிற 2022ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.