Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் சாமானியர்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கிட சங்கிலியாண்டபுரத்தில் புதிய உதயம் – கவிமருத்துவமனை

திருச்சி மாவட்டத்தில் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகாமை மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் மருத்துவ சிகிச்சைக்கென திருச்சி மாவட்டத்தை நோக்கி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

உயர்தர சிகிச்சை அளிக்கும் நவீன மருத்துவ கருவிகளுடன் கூடிய ஏராளமான மருத்துவமனைகள் இங்கு உள்ளதே இதன் காரணமாகும். நவீன மருத்துவ வசதிகளுக்கேற்ப சிகிச்சைக்கான கட்டணமோ சாமானியர்கள் நுழைய முடியாத அளவிற்கே இருக்கின்றன.

இந்நிலையில், எளிய மக்களுக்கும் மிகக் குறைந்த செலவில், உயர்தர மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் நோக்குடன், திருச்சி மாநகரில், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செந்தண்ணீர்புரம் செல்லும் நகர பேருந்து பயண சாலையில், சங்கிலியாண்டபுரம், குமரன் ரோட்டில் கவி மருத்துவமனை அண்ட் நியூரோ பவுண்டேஷன் என்ற பெயரில் புதியதொரு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

N.சந்திரபாபு, டாக்டர் P.ரமேஷ் வைரவன், டாக்டர் R.ராஜ் பாஸ்கர், திரு. ஆரோன் ரமேஷ் மற்றும் திருமதி சுதா சிவக்குமார் ஆகியோரை பங்குதாரர்களாக கொண்டு கட்டப்பட்டுள்ள கவி மருத்துவமனை திறப்பு விழா கடந்த ஜனவரி 25ம் தேதியன்று நடைபெற்றது.  கவி குழுமத் தலைவர் N.சந்திரபாபு அவர்கள் தலைமையேற்று மருத்துவமனை வளாகத்தை திறந்து வைத்தார்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் கதிரியக்க சிகிச்சை மையத்தை, தோல் நோய் மருத்துவர் R.மாணிக்கவாசகம் திறந்து வைத்தார். தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கை, கல்லீரல் மாற்று மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் மருத்துவர் S.குமரகுருபரன் திறந்து வைத்தார்.

விழாவில் திருமதி Dr.காஞ்சனா ராஜ் பாஸ்கர், திருமதி ஞிக்ஷீ.சுஜிதா சந்திரபாபு, திருமதி சுதா ஷிவக்குமார், திருமதி பொன்மொழி சந்திரபாபு ஆகியோர் குத்து விளக்கேற்றினர். விருந்தினர்களை விபத்து மூட்டு மாற்று மற்றும் முதுகு தண்டுவட சிகிச்சை நிபுணர் டாக்டர் P.ரமேஷ் வைரவன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவர் R.மாணிக்கவாசகம் அவர்கள் பேசுகையில், “கொரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவமனையைத் தொடங்கி, மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி, எளிய மக்களுக்கான ஒரு மருத்துவமனையாக கவி மருத்துவமனை திகழ்ந்திருக்கிறது என்ற செய்தி உண்மையில் வியக்க வைப்பதாக இருக்கிறது.  கொடும் நோய்களையும், கடுமையுடன் எதிர்கொள்ளாமல் சாதாரணமாக எதிர்கொண்டு விரட்டி சிறப்பு செய்திருக்கின்றனர். இப்பணியை சிறப்பாக கையாண்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மருத்துவர் S.குமரகுருபரன் அவர்கள் பேசுகையில், “சந்திரபாபு அவர்கள் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து சாதனை படைத்திருக்கிறார். மக்களுக்கான மருத்துவ மனையாக, நோய்களை குணப்படுத்தி வாழ்வை வசப்படுத்த இந்த மருத்துவமனை பெரிதும் உதவிகரமாக இருக்கிறது.

உலகையே அச்சுறுத்திய கொரோனாவையும் எளிதில் குணப்படுத்திய சிறந்த மருத்துவமனை என்பது உண்மையில் வரவேற்கத்தக்கது. மருத்துவத் துறை தனது கடுமையான உழைப்பை சமூகத்திற்கு அளிக்க வேண்டிய நேரத்தில், கவி மருத்துவமனையின் ஒட்டு மொத்த நிர்வாக அமைப்பும் அந்தக் கடுமையான காலத்தை எதிர்கொண்டு நோய்களை வென்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசிய கவி குழுமத் தலைவர் திரு N.சந்திரபாபு பேசுகையில், “என்னுடைய அனைத்து கடமைகளும் முடிந்து விட்டது.  ஆனாலும் நான் ஓயமாட்டேன். மேலும் பெரிய பெரிய இலக்குகளை வகுத்து இருக்கின் றேன், அதை நோக்கிச் சென்று கொண்டே இருப்பேன். எளிய  குடும்பத்தில் இருந்து வந்த நான் மருத்துவம் படிக்க எண்ணினேன். ஆனால் என்னால் முடியவில்லை. உழைத்தேன்.

மருத்துவமனை கட்ட வேண்டும். என்னுடைய மகளை மருத்துவராக்க வேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய இரண்டு கடமை களையும் முடித்துவிட்டேன். பணம் சம்பாதிக்கும் என்ற எண்ணம் இல்லை. மக்களுக்காக உழைக்க வேண்டும். அதற்காகவே இந்த மருத்துவமனையை தொடங்கினேன்.

கொரோனாவால் பாதிக்கப் பட்டவன் நான். கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி செயலாற்றினேன். சாமானியர்களுக்கும் உயர்மட்ட மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்வேன் என்றார்.

இவ்விழாவில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் பணியாற்றிய செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை டாக்டர் காஞ்சனா ராஜ் பாஸ்கர் பாராட்டி கௌரவித்தார். விழா நிறைவில் டாக்டர் சுஜிதா சந்திரபாபு நன்றி தெரிவித்தார்.

இப்ராஹிம்

படங்கள் : பிரசன்னா

Leave A Reply

Your email address will not be published.