வாழ்வில் வெற்றி பெற “நோ சொல்லுங்க”….
வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தை மிகப் பெரிய நிறுவனமாக உயர்த்திய ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னவையே மேற்கூறிய வரிகள்.
ஓர் ஆண்டின் துவக்கத்தில் உங்களுக்கு பல எண்ணங்கள், யோசனைகள் உதிக்கின்றன. தோன்றும் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்ற அனைத்தையும் ஏற்றுக் கொண்டு கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இப்படி பல விஷயங்களில் கவனம் செலுத்திடும் போது முடிவில் எது ஒன்றிலும் முழுமையாக கவனம் செலுத்திட முடியாத நிலைக்கு தான் வருவீர்கள்.
இந்த இடத்தில் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன வாக்கியத்தை பொருத்திப் பார்க்க வேண்டும். உங்களுக்கு பல யோசனைகள் வந்தாலும் அதில் பலவற்றிற்கு “வேண்டாம்” என சொல்லத் தெரிய வேண்டும். சரியான ஒன்றினை தேர்ந்தெடுக்க தெரிந்திருக்க வேண்டும்.
புதுமை அல்லது எதிர்காலம் 1000 விசயங்களுக்கு “வேண்டாம்”என சொல்கிறது, ஆகவே நீங்கள் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் உங்களால் வெற்றி பெற இயலாது. வெற்றி பெறுகிறவர்கள் அவ்வளவு எளிதில் எந்தவொரு புதிய விஷயத்திற்கும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் “நோ”என்று தான் சொல்லுவார்கள்.