ரயில்களில் மூத்த குடிமக்களின் பயணம் குறைந்துள்ளது!
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு பெறப்பட்ட பதிலில், 2021-22ம் நிதியாண்டில் ரயில்களில் மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்ட) 5.5 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
இது 2019-20ம் நிதியாண்டைக் காட்டிலும் 24 சதவீதம் குறைவாகும். அந்த நிதியாண்டில் மூத்த குடிமக்கள் 7.2 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்து இருந்தனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக மூத்த குடிமக்கள் ரயில்களில் பயணம் செய்வது குறைந்ததே இதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.