புதிய தொழில்நுட்பங்களில் அசத்தும் திருச்சி வாழை ஆராய்ச்சி மையம்
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தோகைமலை ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு சந்தையில் விற்பனையாகாத கனிந்த வாழைப்பழங்களை உலர்த்தும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதனால் கனிந்த வாழைப்பழங்களை செலவு குறைந்த வாழைப்பழ பொடிகளாக மாற்றும் மதிப்பு கூட்டும்முறை உதவியாக உள்ளது. உலர்த்தப்பட்ட வாழைப்பழ பொடியை உணவு தயாரிப்பில் பயன்படுத்தலாம். இதனை பான்கேக் போன்ற பேக்கரி பொருட்கள் தயாரிக்க உதவுகிறது. மேலும் ஐஸ்கிரீம், புருட்டாபி, புருட்பார் போன்றவற்றை தயாரிக்க சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுத்தலாம்.
திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தில் ஏற்கனவே துளசி விதையுடன் சர்க்கரை இல்லா வாழைப்பழ சாறு, கலோரி குறைந்த வாழைத்தண்டு சாறு, வாழைத்தண்டு, தோல், பூவிலிருந்து ஊறுகாய் தயாரிக்க தொழில்-நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வாழைக்காய்களை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு தொட்டியத்தில் அமைக்கப்பட்டுள்ளது.