Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வீணாகும் No Claim Bonus..

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வீணாகும் No Claim Bonus..

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் No Claim Bonus. கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும். அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில், உங்கள் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப் போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகி No Claim Bonus.. சான்றிதழ் வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாகக் விண்ணப்பிக்க வேண்டும்.

No Claim Bonus சான்றிதழை பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No Claim Bonus எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு Discount பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை. உங்களின் பழைய கார் வாங்குபவர், அவர் பெயரில் காப்பீட்டை மாற்றும் போது, உங்கள் No Claim Bonus-ஐ அவர் பயன்படுத்த முடியாது, வித்தியாச பிரிமியத்தை அவர் கட்டியே ஆக வேண்டும். எனவே நீங்களும் பயன்படுத்தாவிட்டால் அந்த No Claim Bonus யாருக்கும் பயனில்லாமல் போய் விடும். No Claim Bonus  என்பது காருக்கு அல்ல. விபத்தில் சிக்காமல் காரை இயக்கி வந்த காரின் உரிமையாளருக்குத் தான் சொந்தம். அந்த No Claim Bonus புதிய வாகனம் எடுக்கும் போது மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.