திருச்சியின் சிறந்த பொறியாளர் விருது
திருச்சி மாவட்டத்தில் சிறந்த பொறியாளருக்கான விருதினை திருச்சி, பெல் நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொறியியல் கழகம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு சிறந்த பொறியாளருக்கான விருதிற்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன மேலாளர் பொறியாளர் பாலசுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டார். விருதினை திருச்சிராப்பபள்ளி பொறியாளர் கிளையின் தலைவர் குமரேசன் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிளையின் முன்ளாள் தலைவர் முனைவர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருது பெற்ற பாலசுப்ரமணியம் பற்றிய விபரக் குறிப்புகளை எடுத்துரைத்து நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர்.