திருச்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள், சுவரொட்டிகளை அகற்றிய கலெக்டர் மற்றும் மேயர்
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள், சுவரொட்டிகளை அகற்றிய மேயர்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தில்லை நகர் பகுதியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா .பிரதீப் குமார், இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் மின்கம்பங்கள் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் நடவடிக்கைகளை இன்று (13.8.22) மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் .ஆர். வைத்திநாதன், இ.ஆ.ப., நகரப் பொறியாளர் திரு.சிவபாதம், துணை மேயர், திருமதி .ஜி.திவ்யா, கோட்டத் தலைவர்கள் திருமதி . துர்கா தேவி திருமதி .விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர் திருமதி. கலைச்செல்வி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள்
உடனிருந்தனர். பொது இடங்களிலும், சாலைகளிலுமா வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள், சுவரொட்டிகள், தேவையற்ற பொருட்களை அகற்றும்பணி மாநகராட்சிப் பகுதி முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என்று வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.