Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சூப்பரான பிசினஸ் ஐடியாக்கள்…. ஒரு ஐடியா போதும், உங்கள் வாழ்க்கையை மாற்றிட…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சூப்பரான பிசினஸ் ஐடியாக்கள்…. ஒரு ஐடியா போதும், உங்கள் வாழ்க்கையை மாற்றிட…

 

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு, ஏதாவது பிசினஸ் செய்தே ஆக வேண்டும் என்கிற தேடல் இருக்கும். வேலைக்குச்  செல்கிறவர்களுக்கும் வருமானத்தை உயர்த்திக் கொள்ள பகுதி நேரமாக ஒரு பிசினஸை ஆரம்பிக்கலாம் என்கிற எண்ணம் இருக்கும். குறைந்த முதலீட்டில் தொடங்குவதாக இருக்க வேண்டும். அதிக ரிஸ்க் இருக்கக்கூடாது. வீட்டு வேலை அல்லது வெளி வேலைகளையும்  பார்த்துக் கொண்டு, குறைந்த நேர உழைப்பே போதுமானதாக இருக்க வேண்டும்.

பிசினஸ் தொடங்கிய அடுத்த நாளே லாபம் கொட்ட  வேண்டும். இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்களையும் வைத்திருப்பார்கள். இத்தனை கண்டிஷன்களுக்கும் சரிப்பட்டு வருகிற மாதிரி என்ன பிசினஸ்  செய்வது என்பதே அடுத்த கேள்வியாக இருக்கும்.வாங்கி விற்பதோ, கமிஷன் அடிப்படையில் செய்வதோ சரிப்படாது… சொந்த முயற்சியில்,  நாமே தயாரித்து விற்பனை செய்கிற மாதிரியான ஒரு பிசினஸ் இருந்தால் தேவலை என்கிறவர்களுக்கு அருமையான 50 ஐடியாக்களை வழங்குகிறோம்.

மூலிகை சூப் பவுடர் : முடக்கத்தான், முசுமுசுக்கீரை, கொள்ளு, பிரண்டை, முருங்கை என எதையாவது தேர்ந்து எடுத்து கலப்படம் இல்லாமல் சூப் பவுடர் தயார்  செய்து கொடுக்க நல்ல வருமானம் ஈட்டலாம்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

ஹெர்பல் ஷாம்பு : இதில் கொஞ்சம் கெமிக்கல் கலந்துதான் செய்ய முடியும். செம்பருத்தி, துளசி, கற்றாழை, வேப்பிலை என எதில் வேண்டுமானாலும்   செய்யலாம். எந்திரமோ, பெரிய இட வசதியோ அவசியமில்லை.

ஹேண்ட்வாஷ்: எல்லா வீடுகளிலும் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டது.  வீடுகள் மட்டுமின்றி, ஆபீஸ், ஹோட்டல், கல்யாண சத்திரம் என ஆர்டர்  பிடித்து செய்ய நல்ல லாபம்.

கள்ளக்குறிச்சி அரிசி அப்பளம், உளுந்து அப்பளம், வடகம், வற்றல் : அப்பளத்தை விரும்பாதவர் யாருமில்லை. அப்பளத்தில்தான் எத்தனை எத்தனை வகைகள்…  மிகவும் பிரபலமான கள்ளக்குறிச்சி அப்பளத்தை  செய்வது எளிமையானது. ஒரே நாள் வெயில் போதுமானது.  லாபம் அதிகம். விற்பனை எளிது.

உளுந்து அப்பளம் : இது சற்று கடினம் என்றாலும் இதன் வழிமுறைகள் தெரிந்தால் எளிதாக செய்யலாம். இதை மிளகு, சீரகம் என தனித்தனியே செய்யலாம்.  அடிப்படையைத் தெரிந்து கொண்டால் வெரைட்டி காட்டி அசத்தலாம். தண்ணீர் வடகம், கிள்ளு வற்றல், முறுக்கு வற்றல், கூழ் வடாம் – இவையனைத்தையும் வெயில் காலத்தில் செய்து விற்பனைக்கு கொடுக்கலாம்.

இலை வடாம் : இதில் மிளகு, தக்காளி, புதினா, பச்சைமிளகாய் என நிறைய ரகம் செய்யலாம். இதற்கு வெயில் காலம் மட்டும் அல்ல சாதாரண  நாட்களிலும் செய்யலாம்.

சோப்பு ஆயில், லிக்யூட் சோப்பு : இவை துணிகளுக்கு மட்டுமல்ல, பாத்திரம் துலக்க, டைல்ஸ் துடைக்க என பயன்படுத்தலாம். இதை வாசனை திரவியம் கலந்தும் தயார்  செய்யலாம். முதலில் வீட்டிற்கு, பின் வியாபாரத்திற்கு என செய்ய நல்ல லாபம்தான்.

ஹெல்த் ட்ரிங்க் : இது பூக்கள், காய்கள் போன்றவற்றில் தயாரிக்கலாம். மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகளுடன் சரியான முறையில்  செய்தால் குழந்தை முதல் பெரியவர் வரை குடிக்க ஆரோக்கியமாக இருக்கலாம். விற்பனை செய்ய நல்ல பொருள் தயாரிப்போர் என  மனதிருப்தி இருக்கும். பணமும் ஈட்டலாம்.

டயாபட்டிக் உணவு : கஞ்சி முதல் இட்லி, தோசை, அடை மிக்ஸ் வரை கோதுமை, பார்லி, கேழ்வரகு, கம்பு என ரெடிமிக்ஸ் பவுடராக தயார் செய்து விற்பனை  செய்ய நல்ல லாபம்தான். வரவேற்பும் அமோகம்தான்!

ராஜ்புத் குளியல் பவுடர் : இது  சாதாரணக் குளியல் பொடி இல்லை. இது அரசர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த குளியல் பவுடர். இது குழந்தை முதல் பெரியவர்  உபயோகப்படுத்த முகப்பொலிவு, கரும்புள்ளி, முகப்பரு, முகச்சுருக்கம் வராமல் தடுக்கும். இதை சொல்லி விற்பனை செய்தால் அதிக  லாபம்.

பெருங்காயம் : நிறைய பேர் எசென்ஸ் ஊற்றி தயார் செய்வர். நாம் அதை கலப்படம் இல்லாமல் மரத்தின் பிசின் கொண்டு தயார் செய்து  மக்களுக்கு தரமான பெருங்காயம் விற்பனை செய்ய நல்ல லாபம்… நல்ல வரவேற்பு உள்ள தொழில். அரை மணி நேரத்தில் லாபம்  அள்ளும் தொழில்.

குங்குமம்: இவை வெறும் மஞ்சள் கொண்டே தயார் செய்யலாம். கலப்படம் இல்லாதது என்பதால் அரிக்காது. புண் ஆகாது என உரக்க சொல்லி  விற்பனை செய்யலாம்.  கோயில் உள்ள இடங்களில் விற்பனை அதிகம்.

ஃப்ளோர் கிளீனிங்: பினாயில் போட்டு துடைப்பதை விட இது நன்றாகவே இருக்கும். ஈ, கொசு எதுவும் வராது. வாசனை 4 மணி நேரமாவது இருக்கும். இதை  சொல்லி விற்பனை செய்யலாம். நல்ல லாபம்.

புடவை பெயின்டிங்: 150 ரூபாய்க்கு பிளைன் புடவை எடுத்து அச்சு வைத்து பெயின்டிங் பண்ண நல்ல விலைக்கு விற்கலாம். இதற்கு 1000 முதலீடு  போதுமானதுதான். இதை வைத்தே ரொட்டேஷன் செய்யலாம்.

ரெடிமிக்ஸ் பவுடர்: புளியோதரை மிக்ஸ், எலுமிச்சை மிக்ஸ், தேங்காய் சாத பவுடர் என தயார் செய்து விற்பனை செய்யலாம். இது அவசர காலம் என்பதால்  வரவேற்பு உள்ளது. கடைகள் மற்றும் கண்காட்சியில் விற்பனை வாய்ப்பு உள்ளது.

சாரீஸ் குஞ்சலம் : பட்டுப்புடவை மட்டுமல்ல… பேன்ஸி புடவையிலும் கூட விதவிதமான மணி மற்றும் நூல் கொண்டும் செய்யலாம். குரோஷா பின்னத்  தெரிந்தால் அதிலும் செய்து கொடுக்கலாம். பொட்டிக், புடவைக் கடைகளுடன் பேசி வைத்து ஆர்டர் பிடிக்கலாம்.

ஃபேன்ஸி ஜுவல்ஸ், ஜூட் ஜுவல்ஸ், சில்க் திரெட் ஜுவல்ஸ், பேப்பர் ஜுவல்ஸ் : எதில் நகை செய்தாலும் இன்று வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். புதிது புதிதாகத் தேடுவோருக்கு ஃபேன்ஸி நகைகள் நிச்சயம் பிடிக்கும்.   நாளடைவில் கல்யாண ஜுவல்ஸ் பண்ணும் அளவுக்கு வரவேற்பு உள்ள தொழில்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

காகிதப்பூக்கள் : விதவிதமான கலர் பேப்பர் கொண்டு பூக்கள் கட்டுவது போல் கட்டி மொத்த விலை கடைக்கு விற்பனை செய்யலாம். காலத்திற்கு  ஏற்றாற்போல அதையே மாற்றி மாற்றி செய்யலாம். இது கல்யாணம், மேடை அலங்காரம், வீட்டிற்குத் தோரணம் என பயன்படுத்துவர்.இங்க தயாரிப்பு இது நலிவு அடைந்த நிலை என்றாலும், இதன் தேவை நிறைய ஆபீஸ், பள்ளிகளில் உள்ளது. தண்ணீர் பட்டால் மட்டுமே  அழியும்… மற்றபடி 5 வருடம் ஆனாலும் கூட எழுத்து அப்படியே இருக்கும் என்பது இதன் மகத்துவம். இதனை தொழிலாக செய்து நிறைய ஆர்டர் பிடிக்கலாம்.

மசாலா பொடிகள் : இஞ்சி, பூண்டு மசாலா, சிக்கன் மசாலா பொடி, சில்லி சிக்கன் மசாலா பொடி, சிக்கன் 65… வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான  மசாலாதான், என்றாலும் இன்றைய அவசர வாழ்க்கையில் இதற்கெல்லாம் யாருக்கும் நேரமிருப்பதில்லை. கடைகளில்தான் வாங்குகிறார்கள்.  கெமிக்கல், கலர் போன்ற கலப்படமின்றி, வீட்டிலேயே என விதவிதமான மசாலாபொடி வகைகள் தயார் செய்து விற்பனை செய்யலாம்.

சிறுதானிய தோசை மிக்ஸ், இட்லி மிக்ஸ் : கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு என அனைத்திலும் இதை தயார் செய்து விற்பனை செய்யலாம். அமோக வரவேற்பு உள்ளது. 10 நிமிடம்  ஊற வைத்தாலே தோசை, இட்லி செய்ய முடியும் என்பதால், நல்ல விற்பனை இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

காகித பொம்மை தயாரிப்பு : முன்பெல்லாம் காகிதத்தை ஊற வைத்து அதில் பொம்மை செய்வர். இப்போது காகிதத் தூளாகவே விற்பனைக்கு கிடைக்கிறது. அதை  கொண்டு அதனுடன் சில மூலப்பொருள் சேர்த்து அச்சில் போட்டு தயார் செய்து பெயின்டிங் பண்ணலாம்.

ஜெல்லி : குழந்தைகளுக்கு விருப்பமானது என்பதால், வீட்டிலேயே கெமிக்கல்  இல்லாமல், பழம் கொண்டு தயார் செய்யலாம். இதற்கான கோன்  மொத்த விலை கடைகளில் கிடைக்கும்.  அதில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

சிப்பி பொம்மை : மொத்த விலைக்கடைகளில் இதன் மூலப்பொருள் கிடைக்கும். அதை வைத்து விதவிதமான சிப்பி பொம்மைகள் தயார் செய்து விற்பனை  செய்யலாம். நவராத்திரி கொலுவுக்கு,  வீட்டு அலங்காரத்துக்கு என இதற்கான விற்பனை வாய்ப்பு அதிகம்.

மாஸ்க் தயாரிப்பு : குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.  ஓவியம் தெரிந்தால் இதில் இறங்கலாம். கலர் கலர் பேப்பர் கொண்டு சோட்டாபீம், குரங்கு  பொம்மை, கரடி பொம்மை என தயார் செய்து விற்பனை செய்யலாம். கடைகளுக்கு சப்ளை செய்யலாம்.

கோதுமை காபி : இது காபி தூள் போலவே இருக்கும். டயட்டில் உள்ளவர் விரும்பி வாங்குவர். உடலுக்குத் தீங்கு விளைவிக்காத பொருள் என்பதால்  விற்பனை அமோகம்.

ரோஸ் வாட்டர் : இது முகம் பொலிவாகவும் உடல் குளிர்ச்சியாகவும் இருக்க பயன்படுகிறது. பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்வது வெறும் கலர்  மற்றும் எசென்ஸ். நாம் இதை கெமிக்கல் இல்லாமல் ரோஜா பூக்கள் கொண்டே தயார் செய்யலாம். நிறைய கடைகள் மற்றும் பியூட்டி  பார்லர் என விற்பனை செய்ய நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ஓம வாட்டர் : இதற்கு மிகப்பெரிய வேலை இல்லை. செய்வது எளிது. விற்பனையும் எளிதுதான். இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை  உபயோகப்படுத்த வீட்டில் இருக்க வேண்டிய ஒரு பொருள்.

ரெடிமேட் சப்பாத்தி : இப்போது சற்று அதிகமாக விற்பனை வாய்ப்பு உள்ள தொழில். சுத்தமாக செய்து கொடுக்க நல்ல வரவேற்பு, வாய்ப்பு. வெறும் சப்பாத்தி  மட்டும் செய்து விற்பனை செய்கிறவர்களும் இருக்கிறார்கள். தினம் ஒரு சைட் டிஷ் உடன் விற்கிறவர்களும் இருக்கிறார்கள். உங்கள் வசதி,  உங்கள் ஏரியா வாசிகளின் தேவை ஆகியவற்றைப் பொறுத்து இதை முடிவு செய்யலாம்.

ரெடிமேட் இடியாப்பம் : இதை ராகி, கோதுமை, அரிசி என விதவிதமாக தயார் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். வறண்டு போகாமல் இருக்க நன்றாக பேக் செய்து  விற்பனை செய்ய நல்ல லாபம் உள்ள தொழில்.

கற்றாழை ஜூஸ் : இதற்கு தனிப்பயிற்சி வேண்டாம். கற்றாழையின் உள்ளே உள்ள சதைப்பற்றான பகுதியை எடுத்து 7 தடவை நல்ல தண்ணீரில் அலசி பின்பு  மோர் விட்டு அரைத்துக் கொடுக்கலாம். இதை நேரிடையாகவே விற்பனை செய்ய நல்ல லாபம்தான். பார்க், நடைபாதை போன்ற  இடங்களில் கடை போட்டால் உடனே விற்றுப் போகும்.

அறுகம்புல் (ஜூஸ்) பவுடர் : கோதுமை புல் பவுடர், செம்பருத்தி பூ பவுடர், ஆவாரம்பூ பவுடர் என காலை வேளை நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் விற்பனை செய்ய  நல்ல வரவேற்பு உள்ள தொழில். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணம் வாய்ந்தது. இதைச் சொல்லியோ, நோட்டீஸ்  அச்சடித்தோ விற்பனை செய்யலாம்.

மெஹந்தி  : இதற்குச் சற்று பயிற்சி தேவை.  கலப்பதற்கும் டிசைன் போட்டுவிடுவதற்கும் முறையான பயிற்சி எடுத்த பிறகு பிசினஸாக செய்யலாம்.  வீடுகளுக்குப் போய் போட்டு விடலாம் அல்லது பியூட்டி பார்லர் மூலமாகவும் வாடிக்கையாளர்களைப் பிடிக்கலாம்.

கீ செயின் தயாரிப்பு : விதவிதமான மணி, நூல் கொண்டு செய்யலாம். இதை சாலை ஓரத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு மொத்த விற்பனைக்கு கொடுக்கலாம்.  ஃபேன்ஸி ஸ்டோர்களிலும் கொடுத்து விற்பனை செய்யலாம்.

டிசைனர் அன்பளிப்புகள் : அலங்காரப் பொருள், கிஃப்ட் என கைவினைப் பொருள் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். கொஞ்சம் கற்பனையைச் சேர்த்து,  யாருக்கு என்ன மாதிரியான அன்பளிப்பு தேவை எனத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப டிசைன் செய்து கொடுத்தால் இன்னும் சிறப்பு.  டிசைனர் அன்பளிப்புகள் என்கிற பெயரில் விற்பனை செய்யலாம்.

Nonoven கிளாத் கேரி பேக் : இதற்கு சீலிங் மிஷின் வேண்டும். மெடிக்கல் ஷாப், கோயில் உள்ள இடங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக உபயோகப்படுத்த  விற்பனை செய்யலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால் எல்லோரையும் கவரும்.

ரெடிமேட் அதிரசம் மாவு : வீட்டில் பலகாரங்கள் செய்ய வேண்டும் என ஆசை இருந்தாலும், அதற்காக மாவு அரைக்க, பக்குவப்படுத்த பலருக்கும் பொறுமையோ  நேரமோ இல்லை. அதே நேரம் கடைகளில் செய்ததை வாங்கவும் விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ரெடிமேடாக அதிரச  மாவு, முறுக்கு மாவு, தட்டை மாவு என தயார் செய்து விற்பனை செய்யலாம். கெமிக்கல் சேர்க்காமல் செய்வது தொழில் தர்மம்.

இஞ்சி முரப்பா : இவற்றை தயார் செய்வது மிகவும் சுலபம். சரியான பதம் கைவந்து விட்டால், சில மணி நேரத்தில் தயாரித்துவிடலாம். நெல்லிக்காய்  முரப்பா, தேன் நெல்லி, டூட்டி ஃப்ரூட்டி என தயார் செய்து விற்கலாம். வருடத்தின் எல்லா நாட்களிலும் விற்பனை இருக்கும்.

ரெடிமேட் ஜடை அலங்காரம் : இதற்கு கற்பனைத் திறனும், கை வேலைப்பாடும் தெரிவது அவசியம். இதை சிறிய அளவில் நோட்டீஸ் போட்டு விளம்பரப்படுத்த நல்ல  வரவேற்பு. நிச்சயதார்த்தம், சடங்கு, வளைகாப்பு என சின்னச் சின்ன விசேஷங்களுக்கு ஆர்டர் பிடிக்கலாம்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.