Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அழகு கலையில் அசத்தும் திருச்சி ரூபிணி..!

அழகு கலையில் அசத்தும் திருச்சி ரூபிணி..!

ஹெர் மெஜஸ்டி என்ற பெயரில் அழகு கலை தொழிலில் களம் இறங்கியிருக்கும், திருச்சி, உறையூரைச் சேர்ந்த ரூபினி ராமகிருஷ்ணன், தனது பனிரெண்டாம் வகுப்பிலேயே அழகு கலை பயிற்சியினை பெற்றுள்ளார். தொடர்ந்து கல்லூரி படிப்புடன் Freelauncer ஆக திருமண மணப்பெண் அலங்காரம் செய்து வந்துள்ளார்.

தனது களத்தில் அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ளும் ஆவலுடன் அடுத்து அவர் களமிறங்கியது பெங்களுரில் உள்ள எம்.ஜே.கார்கியஸ் என்ற பள்ளியில் 6 மாதம் மேக்-அப் கோர்ஸ் டிப்ளமோ முடித்துள்ளார். ”கறுப்பாக இருக்கும் பெண்ணிற்கு மேக்அப் போட்டு சிகப்பாக மாற்றுவது தான் ப்யூட்டி பார்லரின் பணி என்றே பலரும் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் அது சரியல்ல.

நான் திருமண மணப்பெண் அலங்காரம் செய்வதற்கு முன்பு அந்த பெண்ணை நேரடியாக பார்த்து, அவருடைய முக வடிவம், அந்த முகவடிவத்திற்கு என்னவிதமாக மேக்அப் எடுக்கும் என்பதையெல்லாம் கஸ்டமர்க்கு உணர்த்துவேன். சிலர் எனக்கு இது போல் வேண்டும் என ஏதாவது புகைப்படத்தை காண்பிப்பார்கள் ஆனால் அந்த மேக்அப் அந்த பெண்ணிற்கு ஒத்துவராது என்றால் அதை அவர்களிடம் கூறி விடுவேன். அவர்களுக்கு ஆசை இருக்கலாம். ஆனால் மேக்அப் முடித்த பின் அவர் எதிர்பார்த்த அழகு வரவில்லையென்றால் வருத்தம் உண்டாகும்.

மேலும் மேக்அப் சரியில்லையென்றால் அது புகைப்படத்திலும் காண்பித்துவிடும்” என்று கூறும் ரூபினி ராமகிருஷ்ணன் மேலும் கூறுகையில்,
பெரும்பாலோனோர் குறைவான விலையில் அலங்காரம் செய்து விடுகிறேன் என்று தரம் குறைவான காஸ்மெடிக் பொருட்களை பயன்படுத்துவார்கள். அது தவறான விஷயம். வாழ்வில் திருமணம் என்பது ஒரு முறை நடக்கும் நிகழ்வு. திருமணத்தில் செய்யப்படும் மேக்-அப் குறைந்தது 5 மணி நேரமாவது முகத்தின் பொலிவை குறைக்காமல் இருக்க வேண்டும். மேலும் தரம் குறைவான காஸ்மெடிக் முகத்தில் அரிப்பை ஏற்படுத்தும். அது திருமணத்தின் போது மணமகளுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் நான் எப்போதும் தரமான காஸ்மெடிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

Bridal Makeover, High Fashion Makeover, Party Makeover, Baby shower Make over, Half saree Makeover, Model Photo shoot, Collaboration என அழகுக் கலை விஷயத்தில் பல விதங்கள் உள்ளன. திருச்சியைப் பொறுத்தவரை திருமண அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள். ஆனால் பெங்களுரில் பார்ட்டிக்கு செல்பவர்கள் கூட ஒரு மேக்அப் ஆர்டிஸ்டிடம் மேக்அப் செய்து கொண்டு தான் பார்ட்டிக்கு செல்வார்கள். அந்த கலாச்சாரம் இங்கு இன்னும் வரவில்லை.
மேலும் ஒவ்வொரு விசேஷங்களுக்கும் என்னவிதமாக காஸ்ட்யும் பயன்படுத்த வேண்டும் என்பதும் உள்ளது. அதன் அடிப்படையிலேயே மேக்அப் செய்கிறோம். பியூட்டி பார்லர் நடத்துபவர்கள் அதிகபட்சமாக திருமண அலங்காரம் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள்.

நான் பியூட்டி பார்லர் படிப்பையும், மேக் அப் ஆர்டிஸ்ட் படிப்பையும் பயின்றுள்ளதால் திருமண மற்றும் எந்த விசேஷம் என்றாலும் என்னவிதமான காஸ்ட்யூம் அணிந்தால் அவர்களுக்கு நன்றாக இருக்கும் என்பதையும் என்னால் தேர்வு செய்து தர முடியும். பொதுவாக திருமண மணப் பெண்ணுக்கு எந்த கலரில் புடவை பிடிக்கும் என்பதை பார்த்து வாங்குவார்கள். ஆனால் நான் அவருக்கு என்னவிதமான டிசைனில், கலரில் புடவை அணிந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் எனது கஸ்டமர்களுக்கு கூறிவிடுவேன்.
கல்லூரிகளில் SFX மேக்அப் போடுவார்கள். அது போன்ற வாய்ப்புகள் திருச்சியில் குறைவு தான் என்றாலும் அவற்றையும் நான் கற்றுத் தேர்ந்திருக்கிறேன். இங்குள்ள கல்லூரி மாணவர்களுக்கும் அவற்றை நான் பரிந்துரைப்பேன்.

திருச்சியில ஒரு Makeup studio திறக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. அங்கு Beautician  மற்றும் Makeup குறித்த பயிற்சிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளேன் என்றார். உங்கள் வீட்டு திருமண விசேஷங்களுக்கு மணப்பெண் அலங்காரம் மற்றும் பார்ட்டி மேக்அப் உட்பட எதுவானாலும் தரமான காஸ்மெடிக் பொருட்களை கொண்டு சரியான விலையில் மேக் அப் செய்து கொள்ள 86808 03177 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் ஹெர் மெஜஸ்டி நிறுவன உரிமையாளர் ரூபினி ராமகிருஷ்ணன்.

Leave A Reply

Your email address will not be published.