திருச்சியில் புதிய ஷோரூம் – சிவாஜி பர்னிச்சர்!
திருச்சி வயலூர் சாலையில் அம்மையப்பநகர் பகுதியில் கடந்த 44 ஆண்டுகள் சிவாஜி பர்னிச்சர் நிறுவனம் இயங்கி வருகிறது. உயர் ரக ஷோபாக்கள் கட்டில்கள், பீரோ, தேக்கு மர நாற்காலி, சீர்வரிசை காம்போ என அனைத்தும் விற்பனை செய்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தின் புதிய கிளை வயலூர் சாலையில் SM நகர் எதிரில் (08.07.2022) அன்று காலை திறக்கப்பட்டது. இந்த புதிய ஷோரூமினை திருநாவுக்கரசர் எம். பி. திறந்து வைத்து வாழ்த்துக்கள் வழங்கினார்.
நிர்வாக இயக்குநர் சிவக்குமார் தலைமையில் நடந்த இந்த விழாவில் தொலைதொடர்பு துறை ஆலோசனை குழு உறுப்பினர் சத்யபாமா முத்துரத்தினம் காவல் துறை ஆய்வாளர் அருள்ஜோதி, IC Trust தலைவர் செந்தில் குமார் உட்பட வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.