மறக்காதீங்க வருகிற 31 கடைசி நாள்..!
வருமான வரித்துறையின் பிரத்யேக புதிய இணையதளம் (இ-ஃபைலிங்) மூலம் 3.03 வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கு டிசம்பர் கடைசி நாளாக 31ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தாக்கல் செய்யாதவர்கள் விரைந்து தாக்கல் செய்யுமாறு மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நவம்பரில் 48 சதவீதம் ஐடிஆர்கள் சரிபார்க்கப்பட்டு 82.80 லட்சம் கணக்குகளில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வரிசெலுத்துவோர் தாமதமின்றி ரீஃபெண்ட் பெற தங்கள் வங்கிக் கணக்குடன் வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்குமாறு மத்திய நிதிஅமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.