பங்கு முதலீட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அப்ஸ்டாக்ஸ்
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆன்லைன் பங்கு தரகு நிறுவனமான அப்ஸ்டாக்ஸ், தன்வசம் ஏறக்குறைய 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் பாரம்பரிய முதலீடுகளுடன், பங்கு முதலீடுகள் நிலையான வருமான ஆதாரமாக இருக்கும் என்று இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இது குறித்து அப்ஸ்டாக்ஸின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரவிக்குமார் கூறுகையில், “அப்ஸ்டாக்ஸ் நிறுவனம் 2021ஆம் நிதியாண்டில் சாதனை படைக்கும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைச் சேர்த்தது. இதற்கு வளர்ந்து வரும் நிதி விழிப்புணர்வு, பங்கு பங்கேற்பு மீதான ஆர்வம், நிலையான தரகு கட்டணத்தில் உள்ளுணர்வு தொழில்நுட்பங்களை வழங்கும் டிஜிட்டல் வர்த்தக தளங்கள் மற்றும் எளிதான இணைய தொடர்பு ஆகியவையே காரணமாகும்.
அப்ஸ்டாக்ஸ் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2 முதல் 3 லட்சம் புதிய கணக்குகளைச் இணைக்கிறது. ஜனவரி 2021 முதல், அப்ஸ்டாக்ஸ் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட டிமேட் கணக்குகளைச் சேர்த்துள்ளது. பயன்படுத்த எளிதான மொபைல் வர்த்தக பயன்பாடுகள், மேம்பட்ட கருவிகள் மற்றும் விருப்பங்களுடன் 100 சதவீதம் ஆன்லைன் கணக்கு திறக்க அனுமதிக்கின்றன. இது வர்த்தகத்தில் முதல் படியை எடுத்து வைக்க நிறைய பேரை தூண்டியுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் பங்கு பங்களிப்பை 2 மற்றும் 3 அடுக்கு நகரங்கள் வழிநடத்தும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது,” என்றார்.