Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

செல்வமகள் சேமிப்பு திட்டம்…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்தத் திட்டத்தில் கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வைப்புத்தொகை செலுத்த வேண்டும். உங்கள் மகளுக்கு 21 வயது ஆகும்போது முழு முதிர்வு காலம் ஆகும்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதேபோன்று, கல்வி, திருமணம் போன்ற முக்கியமான விஷயங்களில் எந்த நிதிச் சிக்கல்களையும் சந்திக்கக்கூடாது என்பதை நினைத்தும் சில பெற்றோர்கள் வருந்துகிறார்கள். அவர்களுக்கான ஒரு சிறந்த சேமிப்பு திட்டம் உள்ளது. உங்கள் மகளின் எதிர்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாப்பாக மாற்ற மத்திய அரசு வழங்கும் ஒரு அற்புதமான திட்டம் தான் இது. அதுதான் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) ஆகும். இந்த திட்டம் பற்றி தற்போது விரிவாக தெரிந்துகொள்வோம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றால் என்ன? இந்த திட்டம் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கணக்கை திறக்கலாம். இது அரசாங்கத்தால் வழங்கப்படும் மிகவும் நம்பகமான மற்றும் லாபகரமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றால் என்ன? இந்த திட்டம் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கணக்கை திறக்கலாம். இது அரசாங்கத்தால் வழங்கப்படும் மிகவும் நம்பகமான மற்றும் லாபகரமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.

வட்டி விகிதம் என்ன? இதில், பெற்றோர்கள் தங்கள் மகளின் பெயரில் ஒரு கணக்கைத் திறந்து, சிறிது சிறிதாக முதலீடு செய்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய தொகையை உருவாக்கலாம். இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் சந்தையில் உள்ள வழக்கமான வங்கி நிலையான வைப்புத் தொகையை விட அதிகமாகும். மேலும், இதில் முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்கு வரி இல்லாத வருமானம் கிடைக்கும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

எவ்வளவு டெபாசிட் செய்யலாம்? செல்வ மகள் சேமிப்புத் திட்டம் தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் அடுத்த மார்ச் 2026 வரை தொடரும். அதன் பிறகு மீண்டும் வட்டி விகிதம் மதிப்பாய்வு செய்ய வாய்ப்புள்ளது. மேலும், இது மிக உயர்ந்த வட்டி விகிதமாகக் கருதப்படுகிறது. இந்த வட்டி விகிதம் அரசாங்கத்தால் ஒவ்வொரு காலாண்டிலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்க ரூ.250 மட்டும் போதும். அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகையை ஒரே தொகையாகவோ அல்லது தவணைகளாகவோ செலுத்தலாம்.எவ்வளவு டெபாசிட் செய்யலாம்? செல்வ மகள் சேமிப்புத் திட்டம் தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் அடுத்த மார்ச் 2026 வரை தொடரும். அதன் பிறகு மீண்டும் வட்டி விகிதம் மதிப்பாய்வு செய்ய வாய்ப்புள்ளது. மேலும், இது மிக உயர்ந்த வட்டி விகிதமாகக் கருதப்படுகிறது. இந்த வட்டி விகிதம் அரசாங்கத்தால் ஒவ்வொரு காலாண்டிலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்க ரூ.250 மட்டும் போதும். அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகையை ஒரே தொகையாகவோ அல்லது தவணைகளாகவோ செலுத்தலாம்.

மாதம் ரூ.12,500 சேமிப்பதன் மூலம் ஒரு வருடத்தில் ரூ.1.5 லட்சம் சேமிக்க முடியும். ஒரு பெண் குழந்தைக்கு 5 வயதாகும்போது ஆண்டுக்கு முதலீடு செய்ய தொடங்கலாம். ஒரு பெண் குழந்தை 21 வயதை அடையும் போது, ​​தோராயமாக கையில் 70 லட்சம் ரூபாய் இருக்கும். இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். 21 வயதில், முதிர்ச்சியடைந்த பிறகு சுமார் 72 லட்சம் பெறுவீர்கள். மொத்தம் ரூ.22.5 லட்சம் கிடைக்கும். முதிர்ச்சியின் போது உங்களுக்கு 49 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி கிடைக்கும். அதாவது, முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ.22,50,000 ஆகும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டையும் இணைத்து ரூ.71,82,119 என்ற மிகப்பெரிய தொகையைப் பெறலாம்.

இது ஒரு பெரிய தொகையாகத் தோன்றினாலும், பணவீக்கம் காலப்போக்கில் இந்த பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது. பணவீக்கம் சராசரியாக ஆண்டுக்கு 5 முதல் 6% இருந்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.71 லட்சத்தின் மதிப்பு இன்று ரூ.22 முதல் 28 லட்சத்திற்கு மட்டுமே சமமாக இருக்கும். அதனால்தான் குடும்பங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடும்போது அதிகரித்து வரும் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவைக் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம்.இந்தத் திட்டத்தில் கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வைப்புத்தொகை செலுத்த வேண்டும். உங்கள் மகளுக்கு 21 வயது ஆகும்போது முழு முதிர்வு காலம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் வட்டி தொடர்கிறது. அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் டெபாசிட் செய்ய அவசியமில்லை. ஆனாலும், இதற்கு வட்டி வசூலிக்கப்படாது. அது தொடர்ந்து வளரும்.

இது ஒரு பெரிய தொகையாகத் தோன்றினாலும், பணவீக்கம் காலப்போக்கில் இந்த பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது. பணவீக்கம் சராசரியாக ஆண்டுக்கு 5 முதல் 6% இருந்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.71 லட்சத்தின் மதிப்பு இன்று ரூ.22 முதல் 28 லட்சத்திற்கு மட்டுமே சமமாக இருக்கும். அதனால்தான் குடும்பங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடும்போது அதிகரித்து வரும் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவைக் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.