பங்குவர்த்தகத்தில் டிவிடெண்ட் பைபேக் எது சிறந்தது?
“பைபேக் செய்யும் நிறுவனம், பைபேக் பங்குகளை வாங்க செலவு செய்யும் மொத்தத் தொகை மீது 23.29% பைபேக் வரி செலுத்த வேண்டும். ஆனால், முதலீட்டாளருக்குக் கிடைக்கும் பைபேக் தொகைக்கு முழு வரி விலக்கு உண்டு.
முதலீட்டாளர்கள் தாம் பெறும் டிவிடெண்ட் வருமானத்துக்கு அவர்களின் அடிப்படை வருமான வரி வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டும்.
உச்சபட்ச வரி வரம்பில் இருக்கும் முதலீட்டாளர், அவர் பெறும் டிவிடெண்ட் வருமானத்துக்கு 42.74% வரி கட்ட வேண்டும். 30% வரி மற்றும் அதற்கும் மேலான வரி வரம்பில் உள்ள அனைத்து முதலீட்டாளர்களுக்கும் டிவிடெண்ட் முறையைவிட பங்கு பைபேக் அதிக லாபகரமாக இருக்கும். 30 சதவிகித்தைவிடக் குறைந்த வரி வரம்பில் வருபவர்களுக்கு டிவிடெண்ட் முறை லாபகரமாக இருக்கும்.
கம்பெனியின் நிறுவனர் இன்னொரு கம்பெனியாக இருந்தாலும் பைபேக் முறை சிறந்தது. ஒரு கம்பெனி அது பெறும் டிவிடெண்ட் வருமானத்தை அதன் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாகத் தராவிட்டால், அந்த வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும்.
இந்த வரி விகிதம் பைபேக் வரி விகிதத்தைவிட அதிகம். எனவே, பைபேக் முறை அத்தகைய நிறுவனத்துக்கும் அதிக வருமானத்தைத் தரும்.
மேலும், பைபேக் தொகை யை அதன் பங்குதாரர்களுக்குப் பிரித்துத் தர வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் தான் டி.சி.எஸ் உட்பட பல நிறுவனங்கள் ஸ்பெஷல் டிவிடெண்டுக்குப் பதில், பைபேக் செய்வதற்கான மூலக் காரணம் ஆகும்.”