சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்வது..?
பொதுவாக சொத்து பத்திரத்தை ஜெராக்ஸ் கடைகளிலோ, தீ விபத்துக்களாலோ இழக்க நேரிடும். இது மாதிரியான சமயங்களில் நமது சொத்துக்கு ஆதாரமாக என்ன செய்வது.?
முதலில் பத்திரம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்து காவல் அதிகாரியின் கையெழுத்துடன் புகார் ரசீது பெற வேண்டும். புகாருக்குப் பின்னும் கிடைக்கவில்லையென்றால் F.I.R. பதிவு செய்ய வேண்டும். பின்னர் NOT TRACEBLE என காவல் நிலையத்தில் சான்று பெற வேண்டும். நோட்டரி வழக்கறிஞர் மூலம் முத்திரைத் தாளில் பத்திரம் தொலைந்துவிட்டது என உறுதி சான்று AFFIDAVIT பெறுதல் வேண்டும். இதற்கிடையில் பத்திரம் காணவில்லை என நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்ய வேண்டும்.
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் எத்தனை வகையான மருத்துவம் பார்க்கப்படுகிறது தெரியுமா?|Ntrichy
வீடியோ லிங்..
பத்திர அலுவலகத்தில் உங்களுடைய பத்திர நகலை COPY OF DOCUMENT போட்டு நகலை பெறுதல் வேண்டும். இப்போது உங்களிடம் உள்ள காவல்நிலைய புகார் ரசீது, எஃப்.ஐ.ஆர்., NOT TRACEABLE சான்று, நோட்டரி உறுதிமொழி பத்திரம், COPY OF DOCUMENT உள்ளிட்ட இந்த ஆவணங்கள் தான் உங்களின் சொத்திற்கான பத்திரமாக பயன்படுத்த வேண்டும்.