MSME-களுக்கு ரூ.15,700 கோடி..!
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.15,700 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.
இது கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட்டைவிட இரு மடங்குக்கும் கூடுதலான தொகை ஆகும். சென்ற வருடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவு ரூ.7,572 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.