சாதனை புரிந்த திருச்சி கோட்ட ரயில்வே..!
திருச்சி ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் 8,430 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதன் மூலம் ரூ.453.49 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதில் 0.378 மெட்ரிக் டன் சிமெண்ட் 1,725 டன் உணவு தானிய ங்கள் கையாளப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 72 சதவீதம் கூடுதலாகும்.
மேலும் நடப்பு நிதியாண்டில் பயணிகள் மற்றும் சரக்கு போக்கு வரத்தானது 98.25 சதவீதம் குறித்த நேரத்தில் இலக்குகளுக்கு கொண்டு சேர்த்து தெற்கு ரயில்வேயில் திருச்சி கோட்டம் 2வது இடத்தை பெற்றுள்ளது.