வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என போட்டி போட்டுக் பல்வேறு வகையான கடன்களை வழங்குகின்றன. எனினும் பெரும்பாலான சம்பளதாரர்கள் அணுகுவது பர்சனல் லோன் எனும் தனி நபர் கடன் தான். ஏனெனில் இதனை எளிதில் பெற முடியும். இந்த பர்சனல் லோன் கொடுக்கும் டாப் 10 வங்கிகள் என்னென்ன? வட்டி விகிதம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
1. டாப் லிஸ்டில் ஹெச்டிஎஃப்சி வங்கி முதலாவ தாக உள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியினை பொறுத்த வரையில் வட்டி விகிதம் வருடத்திற்கு 10.50-&21% வரையில் உள்ளது. இவ்வங்கியில் 12&60 மாதங்களில் கடனை திரும்ப செலுத்த வேண்டும். 15 லட்சம் ரூபாய் வரையில் கடன் கிடைக்கும்.
2. இரண்டாவது இடத்தில் டர்போ லோன்: சோழமண்டலம் பைனான்ஸில் வழங்கப்படுகிறது. இங்கு வருடத்திற்கு வட்டி விகிதம் 15% ஆக உள்ளது. இதில் 5 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெறலாம். இதனை 12-&48 மாதங்களில் திரும்ப செலுத்தலாம்.
3. மூன்றாவது இடத்தில் உள்ள எஸ்பிஐ-யில் இரண்டு வகையான பர்சனல் லோன் உண்டு. ஒன்று எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட் கடனிற்கு – 10.60% வட்டி ஆரம்பமாகிறது. இதில் வயது வரம்பு – 21&60 வயதாகும். கடன் வரம்பு ரூ.25,000 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் பெறலாம். கால அவகாசம் – 60 மாதம் வரையில் கிடைக்கிறது. எஸ்பிஐ பர்சனல் லோன் /ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 9.75% -& 10.25% . இதில் வயது வரம்பு – 21 -& 76 வயது வரையில் வாங்கிக் கொள்ளலாம். இங்கு கடன் – ரூ.25,000 -& 14 லட்சம் ரூபாய் வரை பெறலாம். கால அவகாசம் – 84 மாதங்கள் வரையில் கட்டலாம்
4வது இடத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 8.7% – & 14.25% வரையில் உள்ளது. இங்கு வயது வரம்பு – 21 &- 60 வயது ஆகும். வருமானம் – வங்கி விதிமுறைகளை பொறுத்தது. கடன் அளவு ரூ.50,000 -முதல் ரூ.10 லட்சம் அல்லது வருமானத்தில் 20 மடங்கு.
5. அடுத்த இடத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 12% – & 21%. இதில் வயது வரம்பு – 21 – & 60 வயது. குறைந்தபட்ச வருமானம் – ரூ.15,000. கடன் அளவு -ரூ.50,000 முதல் 15 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கலாம். திரும்ப செலுத்தும் கால அவகாசம் என்பது 12 -& 60 மாதங்கள் வழங்கப்படுகிறது.
6. கனரா வங்கியினை பொறுத்த வரை யில் இரு வகையாக கடன் வழங்கப்படுகிறது. கனரா வங்கி டீச்சர்ஸ் பர்சனல் லோனுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு – 12.40%. வயது வரம்பு – 21 – & 60 வயது. குறைந்தபட்ச வருமானம் – ரூ.10,000. கடன் அளவு – ரூ. 3 லட்சம் ரூபாய் அல்லது 10 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அது. இதனை 48 மாதங்களுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.
இரண்டாவது கனரா வங்கியின் பட்ஜெட் பர்சனல் லோன். இதில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 11.30 – 12.30% ஆகும். இதில் வயது வரம்பு என்பது வங்கியின் விருப்பமாகும். இதேபோல குறைந்தபட்ச வருமானமும் வங்கியின் விருப்பப்படியே. இங்கு கடன் அளவு – ரூ. 3 லட்சம் ரூபாய் அல்லது 6 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அதனை பெறலாம். இதனை திரும்ப செலுத்தும் கால அவகாசம் 60 மாதங்கள் வரை உண்டு.
7. நிதி நிறுவனமான மஹிந்திரா பைனான்ஸில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 26% வரையில் உள்ளது. இங்கு வயது வரம்பு – 21&58 வயது வரை ஆகும். இங்கு கடன் அளவு – ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதனை திரும்ப செலுத்த கடன் கால அளவு – 3 வருடங்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
8. அடுத்த இடத்தில் உள்ள ஐடிபிஐ வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 8.15 -& 10.9.% வரையில் வசூலிக்கப்படுகிறது. இங்கும் வயது வரம்பு – 21 -& 60 வயது வரை உள்ளது. குறைந்தபட்ச வருமானம் – ரூ.15,000 ஆகும். இங்கு கடன் அளவு – ரூ. 3 லட்சம் வரையிலும், திரும்ப செலுத்தும் கால அளவு 3 வருடங்கள் வரையிலும் வழங்கப்படுகிறது.
9. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 10.80%ல் ஆரம்பமாகிறது. இதில் வயது வரம்பு – 21 – & 60 வயது வரையில் உள்ளது. இங்கு குறைந்தபட்ச வருமானம் – ரூ.5,000-க்கு மேல். கடன் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும்.
திரும்ப செலுத்த 60 மாதம் வரை அவகாசம் கிடைக்கும்.