எது உண்மை, எது போலி 500 ரூபாய் நோட்டில் கலந்துள்ள போலி எது..?
சமீபத்தில் 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் உருவம் அருகில் பச்சை கோடு இருந்தால் அது போலியானது செல்லாது என்ற வதந்தி பரவி பொது மக்களிடத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையறிந்த அரசு தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
அதாவது 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவத்தின் அருகில் பச்சைக் கோடு மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்து அருகே கோடு உள்ள 2 வகைகள் இருக்கிறது. இந்த 2 வகைகளும் செல்லும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த 2 வகை நோட்டுகளின் மதிப்பும் ஒரே மாதிரி தான் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.