Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இட்லியை விட தோசை ஏன் அதிக விலைக்கு விற்கிறார்கள் !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இட்லியை விட தோசை ஏன் அதிக விலைக்கு விற்கிறார்கள் ! ரோட்டுக்கடையில் ஆரம்பித்து பெரிய ஹோட்டல்கள் வரை நமக்கு விடை தெரியாத கேள்வி என்றால் இட்லியை விட தோசை ஏன் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பது தான். ஒரு கரண்டி மாவில் ஒரு இட்லி சாதாரண கடையில் 5 ரூபாய் பெரிய ஹோட்டல்களில் 10 ரூபாய்.
அதே மாவில் ஒரு தோசை சாதாரண கடையில் 40 to 50 ரூபாய் பெரிய ஹோட்டல்களில் 100 to 150 ரூபாய் அதாவது ஒரு கரண்டி மாவு இட்லியாகும் போது 10 ரூபாய் ஆகுது அதே ஒரு கரண்டி மாவில் சுடுற தோசை 100 ஆக மாறும் தந்திரம் தான் தெரியல. இதைதான் கோபிநாத் அவர்கள் ஹோட்டல் முதலாளிகளிடம் கேட்கிறார்கள்…
என்ன தான் சொல்றாங்கன்னு பார்க்கிறேன் ஒருத்தர் கூட சரியான காரணத்தை சொல்லவே இல்லை. கோபிநாத்தும் அவர்கள் சொல்ற பதிலில் திருப்தி இல்லாமல் இது கேட்ட கேள்விக்கான பதில் இல்லையேங்கிற மாதிரி வளைச்சு வளைச்சு கேட்டாலும் அவங்க சரியான பதிலை சொல்லவே இல்லை. ஹோட்டல் செலவு, ஆள் சம்பளம் கரண்ட் பில் இதையே தான் சொல்றாங்க. கடைசி வரை சொல்லவே இல்லங்க.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

சாதாரணமா நம்ம வீட்டில் ஒரு கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து போடுவோம். அரிசி ஒரு 60 உளுந்து 38 ரூபாய் ஆக மொத்தம் 98 அதில் போடுற வெந்தயம் ஒரு 2 ரூபாய் வைச்சுக்குவோம் மொத்தம் 100 ரூபாய் ஆகுது. தேங்காய் சட்னி, கொஞ்சம் தக்காளி சட்னி கொஞ்சம் சாம்பார் வைச்சா அதற்கு ஆகுற செலவு 50 ரூபாய் வைச்சுக்குவோம்.
எண்ணெய் ஒரு கால் லிட்டர் ஆகும். ஆக எல்லாம் சேர்த்து ஒரு 200 ரூபாய் ஆகுது இதோட செலவு. இப்ப இந்த ஒரு கிலோ அரிசியில நாம எத்தனை தோசை ஊத்துவோம் எத்தனை பேர் சாப்பிடுவோம் எத்தனை நாள் வைச்சி சாப்பிடுவோம்.
ஒரு ஆள் எத்தனை தோசை சாப்பிடுவோம் உங்க மனக்கணக்குக்கே விடுறேன். இப்ப உங்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும் இவர்கள் திரும்ப திரும்ப.. ஹோட்டலுக்கு ஆகுற செலவையே சொல்லிட்டு இருக்காங்க.
ரோட்டு கடை நடத்துறவங்களுக்கு லாபம் கிடைக்குமாம் பெரிய ஹோட்டல்ல லாபமே பார்க்க முடியாதாம். அப்ப லாபம் தான் கிடைக்கலையே அப்ப நீங்க ரோட்டு கடையே நடந்தலாமே அதுல தான் லாபம் வருதில்ல.
எதுக்கு பெரிய ஹோட்டல் கட்டி லாபமே வராம வியாபாரம் பண்றீங்க.
ஒன்னு நல்லா புரியுதுங்க கண்டிப்பா புத்திசாலிகள் பெரிய ஹோட்டலுக்கு போகப்போவதில்லை ஆடம்பரத்துக்காக வாழ்கின்றவர்கள் மட்டும் தான் பெரிய ஹோட்டல் போகிறார்கள் நீங்க நடத்துங்க நடத்துங்க.. ருசிக்கு இங்க ஆயிரம் கடைகள் இருக்கு…
-NAGARAJAN CHOCKALINGAM,
MELAISIVAPURI, PUDUKOTTAI DT

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.