வெளிநாட்டில் வேலை! திருச்சியில் பயிற்சி மையம்
வெளிநாடு வேலை என்றாலே ஏஜென்ட், மார்க்கெட்டிங் அதிலும் கொஞ்சம் சிரிப்பு, நிறைய பொய் என்ற சொல்லாடல் உண்டு. சொன்ன வேலை ஒன்று. கொடுக்கும் வேலை ஒன்று, அதிக சம்பளம் என கூறிவிட்டு, குறைவான சம்பளம் தருகின்றனர். அதிகமாக வேலை வாங்குகின்றனர் என்ற எண்ணற்ற குமுறல்களை நாம் வெளிநாடு சென்று வந்த பலரிடம் கேட்டிருப்போம். உண்மையில் வெளிநாட்டில் வேலை என்பது நாம் யார் மூலம் செல்கிறோம் என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது.
இந்தியாவில் ஒருபுறம் வேலை இன்றி இளைஞர்கள் பலர் வேலை தேட மற்றொருபுறம் வேலைவாய்ப்புகளை தரும் நிறுவனங்கள் பல உள்ளன. இவை இரண்டுக்குமான பாலமாக செயல்படுவதே எஸ்.எஸ்.கல்ஃப் ட்ரைனிங் சென்டர். இந்த நிறுவனத்தின் சேர்மனாக சுல்தான் ரஷீத் அல் சாராஹ செயல்படுகிறார்.
சென்னையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த எஸ்.எஸ்.கல்ஃப் ட்ரைனிங் சென்டர் தற்போது திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள ஸ்டார் அவென்யூவில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் திருச்சி மையத்தின் தலைவர் திருகண்ணன் நம்மிடம் கூறுகையில், “வெளிநாடுகளில் வேலை பெறும் இளைஞர்களுக்கு முதலில் எங்கள் மையத்தில் மூன்று மாதம் பயிற்சி வகுப்பு நடைபெறும். இந்த மூன்று மாத பயிற்சி வகுப்பில், வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் அங்கு எப்படி நடக்க வேண்டும், சீதோஷ்ண நிலை எப்படி இருக்கும், உணவு முறை, பழக்க வழக்கங்கள், என்ன வேலைக்கு செல்கிறார்களே அதற்கான தகுதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறோம். மூன்று மாத பயிற்சியினை முடித்தவுடன் தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறோம். பயிற்சிக்கு வெளிநாடு செல்பவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். அதில் இருதரப்பினரும் கையெழுத்துப் போட்ட உத்தரவாத பத்திரம் தயார் செய்யப்படுகிறது.
இரண்டு வருட காலம் உத்தரவாதத்தின் அடிப்படையில் அனுப்பப்பட்ட நபருக்கு முதல் வருடம் அவர் இன்டர்ன்ஷிப் பயிற்சி வகுப்பில் இருப்பார். அந்த ஒரு வருடத்தில் அவருக்கு தங்குவதற்கான இடம் மற்றும் சாப்பாட்டுடன் இந்திய மதிப்பின்படி சம்பளம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. தொடர்ந்து அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்ற விரும்பினால், அவரை பயிற்சி மாணவரிலிருந்து நிறுவன ஊழியராக பணியமர்த்தி இந்திய மதிப்பின்படி 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
முதல் வருடம் 10,000 சம்பளம் பெற்றவர், இரண்டாம் வருடம் 20 முதல் 25 ஆயிரம், மூன்றாவது வருடம் காலத்தில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் என சம்பள உயர்வு பெறுவார். ஐந்தாண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, அவருடனான ஐந்தாவது ஒப்பந்தம் போடும் போது ஒரு லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எங்கள் நிறுவனத்தில் 100% அவர்களை வேலைக்குத் தயார் செய்து வேலையை கிடைக்க உத்தரவாதம் அளிக்கிறோம்.
இந்திய அரசின் கொள்கைகளுக்கும், செல்லக்கூடிய நாட்டின் கொள்கைகளுக்கும் உட்பட்டதாகவும், அனுமதி பெற்றதாகவும் எங்களுடைய முழு செயல்பாடுகளும் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறும் வாய்ப்புண்டு” என்றார். பயிற்சி குறித்து மேலும் விபரங்கள் பெற 8883 606 606, 8428 606 606 என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வேலைவாய்ப்பிற்கான பயிற்சிக்கான வகுப்பானது திருச்சி மேலச்சிந்தாமணியில் உள்ள மைய அலுவலகத்தில் வரும் 11.04.2021ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 28 வயதிற்குள்ளானவர்களாக இருக்க வேண்டும். 10, 12ஆம் வகுப்பு, ஹோட்டல் மேலாண்மையில் டிப்ளமா முடித்த ஆண் பெண் என இருவருமே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். அனுமதி கட்டணம் ஏதும் இல்லை.