மத்திய அரசு ஊழியர்களுக்கும் “WORK FROM HOME” திட்டம்
சென்ற ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே ( “WORK FROM HOME” ) வேலையை செய்யச் சொல்லி பணித்தது. தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது.
இதையடுத்து மத்திய அரசும் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றச் சொல்லலாமா என பரிசீலித்து வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் தனிமனித இடைவெளியை உறுதிசெய்வதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்படி துறை செயலாளர்களுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு அலுவலகங்களில் 30% ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என கூறியிருந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்தே பணியாற்றும் திட்டத்தை குறித்து மத்திய அரசு வடிவமைத்து வருகிறது.