ஜீரோ முதலீடு, அதிக லாபம்.. டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம்பெற வைக்கும் புதிய தொடர்-6
Facebook promotion :
டிஜிட்டல் மார்க்கெட்டிங்:
இன்றைய காலங்களில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர். எனவே ஒரு தயாரிப்பு அல்லது சேவையை பிரபலப்படுத்த சமூகவலை தள மார்க்கெட்டிங் ஒரு முக்கிய மார்க்கெட்டிங் முறையாக மாறியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இன்று மிகவும் பிரபலமாக உள்ளன. உலக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இவை பெரும்பாலான பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளன.
சமூக வலைதளங்களில் இன்று தவிர்க்க முடியாத ஒரு வலைதளமாக மாறி இருக்கிறது ஃபேஸ் புக். உலக அளவில் தனக்கென 2.9 பில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்திய அளவில் 340 மில்லியன் பயனாளர்களை கொண்டிருக்கிறது. பேஸ்புக் கணக்கு வைத்துள்ள ஒருவர் ஒரு மாதத்திற்கு தோராயமாக 17 மணி நேரங்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகிறார் என ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
இந்த அளவிற்கு அதிக பயனாளர்களையும் பயன்படுத்தும் நேரத்தையும் கொண்டுள்ள ஃபேஸ்புக் மற்ற சமூக வலைதளங்களை போல கருத்துக்களை பதிவிடவும், போட்டோ வீடியோக்களை பதிவிடும் சமூகவளைதளமாக இல்லாமல், அதன்பயனாளிகளுக்கு ஷாப்பிங் செய்யும் ஒரு வலைதளமாகவும் மாறியுள்ளது.
2016ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக்-ல் ”மார்க்கெட் பிளேஸ்” என்ற ஒரு புதிய வசதியை ஏற்படுத்தியது.
இதன் மூலம் அதன் பயனாளர்கள் ஃபேஸ்புக்-ல் ஷாப்பிங் செய்து கொள்ளலாம். ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸ்-ல் நமது பொருட்களை பதிவிட வேண்டுமென்றால் முதலில் நமக்கு தேவையானது ஒன்றே ஒன்றுதான்.அதுஃபேஸ்புக் அக்கவுன்ட் மாத்திரமே.
உங்கள் நிறுவனத்திற்கென ஒரு பேஸ்புக் அக்கவுண்ட்டை கிரியேட் செய்து கொள்ள வேண்டும். பின்பு பேஸ்புக் அக்கவுண்ட்டில் நிறுவனத்திற்கென ஒரு ஃபேஸ்புக் பேஜ் உருவாக்க வேண்டும். பின்பு ஃபேஸ்புக் பேஜில் ஃபேஸ்புக் ஷாப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஃபேஸ்புக் ஷாப்பில் நிறுவனத்தின் தயாரிப்புகளை புகைப்படம், விலை மற்றும் அதை பற்றிய சிறுதகவல் ஆகியவற்றை பதிவிட்டு கொள்ளலாம். இதேபோல் பல தயாரிப்புகளை ஒரு கேட்டலாகாக (CATALOGUE) அமைத்துக் கொள்ளலாம். அந்த கேட்டலாகை ஃபேஸ்புக் குரூப்களில் ஷேர் செய்யலாம். இந்த முறையை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளையும் ஃபேஸ்புக் உதவியுடன் சுலபமாக விற்கலாம்.
உதாரணமாக திருச்சியில் ஒரு பர்னிச்சர் கடை இருக்கின்றது என வைத்துக் கொள்வோம். அந்த பர்னிச்சர்களை அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட விரும்புகிறார், அவரது தயாரிப்புகளை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள ஃபேஸ்புக் ஷாப் வசதியைப் பயன்படுத்தி அவர் அவரது பர்னிச்சர்களை புகைப்படங்கள் எடுத்து விலையுடன் பதிவிடலாம். யாரேனும் அதை பார்த்துவிட்டு அவர்களுக்கு அந்த பர்னிச்சர் பிடித்திருந்தால் ஃபேஸ்புக் மூலமாக இவரை தொடர்பு கொண்டு அந்த பர்னிச்சரை வாங்கி கொள்வார்.
(ஃபேஸ்புக்கில் நமது வாட்ஸ்அப் நம்பர், மெயில் ஐடி ஆகியவற்றையும் பதிவிட்டுக் கொள்ளலாம்) இதன் மூலம் அவரது பர்னிச்சர்கள் ஃபேஸ்புக் மூலமாக விற்பனையாகின்றன, லாபமும் இரட்டிப்பாகிறது. இதில் மிகவும் முக்கிய விஷயம் என்னவென்றால் 1 ரூபாய் செலவுமில்லாமல், இடைத்தரகர் கமிஷன் இல்லாமல் உங்கள் தயாரிப்புகளை ஃபேஸ்புக் ஷாப்பில் விற்பனை செய்யலாம். இவ்வாறு ஃபேஸ்புக் ஷாப்பை பயன்படுத்தி உங்களது நிறுவனத்தின் பொருட்களையும் பேஸ்புக்கில் விற்று ஜீரோ முதலீட்டில் அதிக லாபத்தை பெறலாம்.
-தேவா கேசவன்
முந்தைய தொடரை வாசிக்க…
ஜீரோ முதலீடு, அதிக லாபம் … டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 5