Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பத்தாம் வகுப்பு முடித்தவரா, நீங்கள் ? அரசு பாலிடெக்னிக்கில் அருமையான வாய்ப்பு !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

 

திருச்சி  சேதுராப்பட்டியில் உள்ள  ஸ்ரீரங்கம், அரசினா்  பாலிடெக்னிக் கல்லுாரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில்  நான் முதல்வன் – உயா்வுக்குபடி நிகழ்வு 2024 என்ற திட்டத்தின் மூலம் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டில் சோ்வதற்கும் (Spot Admission), அண்மையில் வெளியிடப்பட்ட ITI-SCVT தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவா்களும் மற்றும் அடுத்து வெளியிடப்படவிருக்கும் ITI-NCVT தேர்வு முடிவில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் நேரடி இரண்டாமாண்டில் சேருவதற்கும் மாணவா் சோ்க்கை கால அவகாசம் 27.09.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிப்ளமோ முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் சேர விரும்பும் மாணவா்கள் கல்லூரிக்கு நேரில் வந்து ரூ.150/-ஐ செலுத்தி விண்ணப்பிக்கலாம். SC/ST மாணவா்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இப்பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைப்பியல் (DCE-சிவில்), இயந்திரவியல் (DME-மெக்கானிக்கல்), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (DEEE-எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்), மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் (DECE-எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன்) மற்றும் கணிப்பொறியியல் (DCSE-கம்ப்யூட்டர்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,142/- மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும்.

முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்போர், 10-ம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு ஐடிஐ (ITI) அல்லது 12ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மாணவா்கள் சோ்க்கை தொடர்பாக 95974 76719, 82482 52577, 73739 05151, 90424 18693, 98423 16326, 88389 40440, 80720 02452 தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

சிறப்பம்சம்

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள் மூன்று ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு. அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், ஸ்மார்ட்கிளாஸ் ரூம், மாணவ மாணவியருக்கு விடுதி வசதி, இலவச பேருந்து பயண அட்டை, இரயில் கட்டண  சலுகை, முதலாமாண்டு மாணவா்களுக்கு இலவச பாடப்புத்தகம், 6 முதல் 10 அல்லது 12 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவ / மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியா்களுக்கு வேலை வாய்ப்பை உயா்த்திட திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசின் உதவித்தொகையுடன் தொழிற்சாலைகளில் உள்ளுறை பயிற்சி (Internship Training), தொழிற்முனைவோர் மேம்பாட்டிற்காக நுனு பிரிவின் மூலம் சிறப்பு பயிற்சி, மதிப்பெண் அடிப்படையில் மாணவியா்களுக்கு (Pragati) உதவித்தொகை வருடம் ரூ.50,000, மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியா்களுக்கு (Saksham) உதவித்தொகை வருடம் ரூ.50,000, பெற்றோரை இழந்த மாணவ /  மாணவியா்களுக்கு (Swanath) உதவித்தொகை வருடம் ரூ.50,000, மாணவ மாணவியா்களுக்கு Chess Club, Cultural Club, Python( App Designing) Club, Literacy  Club போன்ற பல்திறன் மேம்படுத்தும் பயிற்சிகள், சென்ற ஆண்டு 2023-2024ல் மூன்றாம் ஆண்டு முடித்த அனைத்து மாணவா்களும், வளாக நோ்காணல் மூலம் 100 சதவிகிதம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

மேற்கண்ட  தகவலை  மாவட்ட ஆட்சித்தலைவா்  திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப. அவா்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:

உதவி இயக்குநர்,

செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.