2021-&ல் நீங்கள் பணக்காரராக பின்பற்ற வேண்டிய 12 வழிகள்..!
1. இரவு 11க்கு மேல் விழித்திருக்காதீர்கள். கண்டிப்பாக காலை 5 மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து அன்றைய பணிகளை தொடங்குங்கள். தினமும் 6 மணி நேரம் கட்டாயம் தூங்குங்கள்.
2. வெற்றி பெறுவதற்கு இது வரை செய்த முயற்சிகளை சீர்தூக்கிப் பாருங்கள். எங்கெல்லாம் சறுக்கியது, அதற்கான காரணம் என்ன என்பதை மற்றவர்களை குறை கூறாமல் ஒரு அரை மணி நேரம் அலசி ஆராயுங்கள். நீங்கள் அடுத்து எடுத்து வைக்கப் போகும் பாதையில் ஒரு தெளிவு கிடைக்கும்.
3. மற்றவர்கள் செய்வதையே நாமும் செய்ய வேண்டும் என முயற்சிக்காமல் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.
4. ஆங்கில அகராதியில் தினமும் 10 வார்த்தைக்கு அர்த்தம் பாருங்கள். இந்த பழக்கம் உங்கள் ஆங்கில அறிவை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். சிறந்த புத்தகங்களை தேடி வாங்கிப் படியுங்கள்.
5. பணத்தை எப்படி செலவு செய்வது என்பதை அறிந்து செலவு செய்ய வேண்டும். குறிப்பாக தொழில் செய்பவர்கள் ஆண்டுதோறும் உங்கள் தொழிலில் 20 சதவீதம் முதலீடு செய்யுங்கள். அது உங்கள் நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
6. தியாகம் பண்ணாமல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. எனவே சிறிய சந்தோஷங்களை தியாகம் செய்யுங்கள். வெற்றி பெற்றவர்கள் குறுகிய கால சந்தோஷங்களை தியாகம் செய்தவர்களாகவே இருப்பார்கள்.
7. உங்களைப் பற்றி புத்தகம் எழுதுங்கள். இது உங்களை பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும். இதற்கு நீங்கள் டைரி எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டாலே போதும்.
8. முடிவெடுக்க முடியாத விஷயத்தை தள்ளிப் போடுங்கள். அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருங்கள். அது உங்கள் ஆழ்மனதில் பதிந்து சரியான தீர்வை தரும்.
9. மாதம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 3 சதவீதம் ஒதுக்கி உங்கள் வளர்ச்சிக்கென்று செலவிடுங்கள்.
10. உங்களின் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அதிகப்படுத்துங்கள்.
11. தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.
12. தினமும் தியானம் செய்யுங்கள். 10 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
– பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்