வாரத்திற்கு 3 நாள் லீவு… புதிய தொழிலாளர் சட்டம் வரப்போகுது
ஜுலை 1 முதல் மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டத்தை கொண்டு வருகிறது. இதன்படி வாரம் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை என திருத்தியுள்ளது. ஆனால் தினந்தோறும் வேலை நேரம் 8லிருந்து 12 மணி நேரமாக அதிகரித்துள்ளது. (பழைய நடைமுறையில் வாரம் 6 நாள் வேலை, வேலை 8 மணி நேரமாக இருந்தது)
புதிய விதிகள்படி தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும். இதனால் தொழிலாளர் பிஎப்க்கு நிறுவன பங்களிப்பு அதிகரிக்கும். ஆனால் ஊழியர் சம்பளம் குறையும். அதே நேரத்தில் பிஎப் தொகை அதிகரிப்பதால், ஒய்வுக்கு பின்னர் தொழிலாளர்கள் சிறப்பான வாழ்க்கைக்கு இது உதவும்.