உழைத்து சேமித்த பணத்தை பாதுகாப்பாக எங்கு சேமிப்பது என்று குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ். பணத்திற்கு பாதுகாப்பான மத்திய அரசின் 3 முதலீடு திட்டங்கள் உள்ளன. கிசான் விகாஸ், அடல் ஓய்வூதிய திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம்.
கிசான் விகாஸ் திட்டத்தின் முதலீட்டு காலம் 112 மாதங்கள் ஆகும். இதன் மூலம் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.1,000 வரை முதலீடு செய்யலாம். இதற்கான அதிகபட்ச வரம்பாக இல்லை.
இந்த திட்டத்திற்கு வரிவிலக்கு எதுவும் கிடையாது. எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இதனை பயன்படுத்தி வங்கிகளில் கடன் வாங்கிக் கொள்ள முடியும். இது இந்திய அரசின் உத்தரவதம் கொண்ட சேமிப்பு திட்டம்.
18 முதல் 40 வயதுடைய ஒரு இந்திய குடிமகன் அடல் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியானவராவார். சுய தொழில் செய்பவர்கள் எவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். வங்கி அல்லது தபால் நிலையத்தில் இந்த திட்டத்தினை எடுத்துக் கொள்ளலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஈக்விட்டி மற்றும் கார்ப்பரேட் பாண்ட்கள், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு திட்டத்தில் ரூ.50,000 வரையிலான முதலீட்டு திட்டத்தில் 80 சிசிடின் (1பி) கீழ் வரி விலக்கு உண்டு.