இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் சட்லஜ் ஆற்றின் மீது அமையவுள்ள 210 மெகாவாட் லுஹ்ரி பகுதி-மி நீர் மின்சார திட்டத்துக்கான ரூ 1810.56 கோடி முதலீட்டு முன்மொழிதலுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 758.20 மில்லியன் அலகுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். சட்லஜ் ஜல் வித்யூத் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால் இந்திய அரசு மற்றும் மாநில அரசின் ஆதரவோடு 62 மாதங்களுக்குள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. சுற்றுச் சூழலில் இருந்து வருடத்துக்கு 6.1 லட்சம் டன்கள் கரியமில வாயுவை குறைப்பதற்கு இது வழி வகுக்கும்.