Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இசேவை மூலமாக 300 சேவைகள் இ-ஆபிஸ் ஆகும் அரசு அலுவலகங்கள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இசேவை மூலமாக 300 சேவைகள் இ-ஆபிஸ் ஆகும் அரசு அலுவலகங்கள்

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியது :
இ சேவை மையங்களில் சாப்ட்வேர் அப்டேட் செய்து எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்படுகிறது. இசேவை 2.0 என்ற திட்டத்தை அறிவித்து அதன் மூலமாக அனைத்து அரசு திட்டங்களையும் ஆன்லைனில் வழங்கிட முயற்சி நடந்து வருகிறது .

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இ சேவை மூலமாக இந்த ஆண்டு 300 சேவைகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது . அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன . அனைத்து அரசு அலுவலகங்களையும் இ ஆபிசாக மாற்றும் முயற்சி நடக்கிறது. ஏற்கனவே தலைமைச் செயலக ஊழியர்களுக்கு ஐடி ஊழியர்கள் மூலம் முறையான பயிற்சி அளித்து , அங்கு இ ஆபீஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .

இப்போது கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா , கிராம அலுவலகங்களை ஆபீஸ் திட்டத்தில் கொண்டு வர திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம் . இதன் மூலம் வேலைகள் எளிதாகும். பைல்கள் வேகமாக தயாரிக்க முடியும் . கார்ப்பரேட் போல் வீட்டில் இருந்துகூட வேலை என்பது சாத்தியமாகும் . டிஜிட்டல் மயமாக்கலில் தமிழகம் வெகு விரைவில் முதன்மை பெற்றுவிடும் . அரசு ஐடி துறையுடன் , ஏனைய துறைகளையும் சேர்த்து பணியாற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.