பிரதமர் தயாராத்தான் இருக்கிறாரு… ஃபின்டெக் நிறுவனங்கள் தொடர்பில் இருங்க…
இந்தியாவில் ஃபின்டெக்கள் (நிதி தொழில்நுட்பம்) நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேச அளவில் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்து ‘ குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2022 ‘ கருத்தரங்கு மும்பையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், அரசுடன் இடைவெளி அதிகமாக இருக்கும்போது நம்பிக்கை குறையும். தொடர் உரையாடலில் இருந்தால் தான் இடைவெளி குறையும். பிரதமர், அமைச்சர்கள், நிதி ஆயோக் உறுப்பினர்கள் என அரசுத் தரப்பினர் எப்போதும் உரையாடலுக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் தயாராகவே இருக்கின்றனர். நம்பிக்கையை உருவாக்குவதற்கான ஒரே வழி தொடர் உரையாடலில் இருப்பது தான் என்றார்.
பொருளாதார வளர்ச்சி சூப்பராம்…
கரோனா பரவல், ரஷியா – உக்ரைன் இடையிலான போர் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளை உலகம் எதிர்கொண்டு வருகிறது . இவை வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது . வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாகத் தக்கவைக்கும் வகையில், இந்தியா நல்ல நிலையில் உள்ளது .