“6 மாதத்தில் 3340 வணிகர்கள்”
திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட வணிக வரி கோட்டத்தில் உள்ள 9 வருவாய் மாவட்டங்கள் (திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை வருவாய் வட்டம்) மூலம் கடந்த 2021 ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரையில் ரூ.438.70 கோடி எஸ்.ஜி.எஸ்.டி. வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 2020 ஜனவரி முதல் ஜூன் வரை உள்ள 6 மாதத்தில் ஈட்டப்பட்ட வருவாயை காட்டிலும் ரூ.114.03 கோடி அதிகமாகும். அதாவது கடந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.324 கோடி மட்டுமே..!
கடந்த 6 மாதத்தில் திருச்சி கோட்டத்தில் 3340 வணிகர்கள் புதிதாக பதிவுச் சான்று பெற்றுள்ளனர். இதையடுத்து பதிவு பெற்ற வணிகர்களின் மொத்த எண்ணிக்கை 52,000 ஆக உள்ளது.