இணையம் மூலம் 4.31 கோடி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்கள் விநியோகம்..!
கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஆரோக்கிய சேது செயலி 17 கோடி தடவை பதிவிறக்கம் செய்யப்பட்டது; கொரோனா-19 பரவல் சாத்தியமுள்ள பகுதிகளை அதிக அளவில் முன்கூட்டியே கணித்தது.
இ—&மருத்துவமனைகள் 418 நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன, சுமார் 17.5 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. 4.31 கோடி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்களை இணையம் மூலம் நவம்பர் 2020 வரை ஜீவன் பிரமாண் வழங்கியுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் டிஜிட்டல் திறன் வளர்த்தல் முன்னெடுப்பின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை இது சென்றடையும் என குறிப்பிட்டுள்ளது.