பழைய வாகனத்தை அழித்தால் புதிய வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி
“நாடு முழுவதும் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 51 லட்சம் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான 34 லட்சம் வாகனங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த பழைய வாகனங்கள் அழிப்பதில் கிடைக்கும் ஸ்டீல், பிளாஸ்டிக், அலுமினியம், தாமிரம் போன்ற மூலப்பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு, புதிய வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுவதால் உதிரி பாகங்கள் விலை 40 சதவீதம் வரை குறைவாக வாய்ப்பு உண்டு.
எனவே பழைய வாகனத்தை அழித்து புதிய வாகனம் வாங்க வருபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி அல்லது ஊக்கத் தொகை வழங்கினால் புதிய வாகனங்கள் விற்பனை அதிகரித்து, 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் தொழிலின் வர்த்தகம் ரூ.10 லட்சம் கோடியாக உயரும்” என சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.