கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டா் தகவல்
திருச்சி, செப்.13- திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியம் மூலம் ரூ.7 1/2 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாப கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டா் கூறினார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
தொழிலாளா் நலத்துறையின் கீழ் கட்டுமான தொழிலாளளா்கள், ஆட்டோ ஓட்டுனா் மற்றும் அமைப்புசாரா உடலுழைப்பு தொழிலாளா்கள் என்று 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்த தொழிலாளா்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற்று வருகின்றனா். இந்தநிலையில் திருச்சி மாவடடத்தில் நலவாரிய நலத்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டா் மா.பிரதீப்குமார் தலைமை தாங்கினார். தொழிலாளா் இணை ஆணையா் திவ்வியநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், மாவட்ட சமூக நல அலுவலா், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் வேலையளிப்போர் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். கூடடத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கலெக்டா் கூறியதாவது-
நலத்திடட உதவிகள்
திருச்சி மாவட்டத்தில் பதிவு செய்த மொத்த தொழிலாளா்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 95 ஆகும். தற்போதைய அரசு பதவி ஏற்ற ஆண்டான 2021 முதல் 2024 வரை புதிய உறுப்பினா்களாக பதிவு செய்த தொழிலாளா்களின் எண்ணிக்கை 61,344, பதிவினை புதுப்பித்தல் செய்தவா்களின் எண்ணிக்கை 30,046 ஆகும். அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 70,132 தொழிலாளா்களுக்கு ரூ.40 கோடியே 29 லட்சத்து 68 ஆயிரத்து 498 நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளது.
மேலும் , நடப்பு நிதியாண்டில் கடந்த 5 மாதங்களில் திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள நல வாரியத்தில் பதிவு பெற்ற 19,768 தொழிலாளா்களுக்கு ரூ.7 கோடியே 55 லட்சத்து 59 ஆயிரத்து 656 நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயது முதல் 60 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலான அமைப்புசாரா தொழிலாளா்கள் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் www.tnuwwb.tn.gov.in. என்ற இணையதளத்தில் பதிவு செய்து பலன் பெற்று வருகின்றனா்.
சிறப்பு கவனம்
தொழிலாளா்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்யவும் தெளிவுரை கோரி அனுப்பப்பட்ட மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி மனுதாரரை தொடா்பு கொண்டு மற்றும் தொழிற்சங்கம் மூலம் சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு தகவல் தெரிவித்து விண்ணப்பத்தை சரிசெய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும். தொழிலாளா்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தில் பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து தொழிலாளா்களுக்கு திதி உதவி வழங்க விதைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசின் நலத்திட்ட உதவித் தொகைகள் பெற்று பயனடையுமாறு கலெக்டா் கேட்டுக் கொண்டார்.
இந்த தகவலை திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகபாதுகாப்புத் திட்டம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்