கொள்முதலும், செலுத்து தொகைகளும் இரண்டரை மடங்கு அதிகம்..!
2020ம் ஆண்டு மார்ச் முதல் கொரோனா தாக்குதல் காரணமாக பல்வேறு மட்டத்திலும் பொருளாதார தாக்குதல்கள் அதிகரித்தே காணப்பட்டன. இந்நிலையில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகமானது, பொதுத் துறை நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து செய்த கொள்முதல்கள் மற்றும் செலுத்திய தொகைகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கிடையே மட்டும் கொள்முதல்களும், செலுத்திய தொகைகளும் ரூ 2,300 கோடி உயர்ந்து, ரூ.5,000 கோடியை தொட்டுள்ளன. இது கடந்த காலங்களை விட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகமாகும். அத்துடன் மே மாதத்தில் 76 சதவீதமாக இருந்த மாதாந்திர கட்டணங்களின் விகிதம், அக்டோபர் மாதம் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிலுவைத் தொகையானது 24 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக இது குறைந்துள்ளது.