அஞ்சலக வங்கி கணக்கிற்கும் இணையதள வசதி:
அஞ்சல் துறையில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கு இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வங்கி சேவை உள்ள அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள கணக்குகளில் இந்த வசதியினை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென அந்தந்த அலுவலகங்களில் ஒரு படிவம் பூர்த்தி செய்து தர வேண்டும்.
மேலும் இதில் கணக்கின் விவரம் மற்றும் இருப்புத்தொகை, பரிவர்த்தனை விவரம், கணக்கு பட்டியல் விபரம், ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கிலிருந்து மற்றொரு அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு பணமாற்றம், அஞ்சலக சேமிப்பு கணக்கிலிருந்து ஆர்டி/பிபிஎப் கணக்குகளுக்கு பணம் செலுத்தலாம். ஆர்டி கணக்கு துவங்கலாம். அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.