Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வருமான வரி தாக்கல் ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைபெறும் மாற்றங்கள்…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வருமான வரி தாக்கல் ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைபெறும் மாற்றங்கள்…

பொதுவாக வருமான வரி தாக்கலின்போது புதிய வரி கொள்கை, பழைய வரி கொள்கை என இரண்டு வகை உண்டு எதை தேர்வு செய்து தாக்கல் செய்யப் போகிறீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்படும்.

ஆனால் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த ஆப்ஷனை எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும் புதிய வரி கொள்கை முறையே “டிபால்ட்” முறையில் பின்பற்றப்படும்.

இன்சூரன்ஸில் ரூ. 5 லட்சத்திற்கு மேல்…

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

புதிய வருமான வரி கொள்கையின்படி இன்சூரன்ஸ் முதிர்வு தொகை ரூ‌.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அதற்கும் வருமான வரி செலுத்த வேண்டும். புதிய வருமான வரி கொள்கையின்படி இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் அபராதம் விதிக்கப்படும்?

நீங்கள் செய்யும் ஒரு சில தவறுகள், வருமான வரி தாக்கலின் போது தேவையில்லாத அபராதங்களை உருவாக்கக்கூடும். குறிப்பாக வருமானத்தை குறைத்தும் மறைத்தும் தாக்கல் செய்து இருந்தால் சட்டப்பிரிவு 270- ஏ படி, வருமான வரியில் இருந்து 50% தொடங்கி அதிகபட்சமாக 200 %  வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

அபராதம் ஏன்?

  1. உண்மைகளை மறைத்தல்
  2. முதலீட்டை மறைப்பது
  3. போலியான செலவினங்களை உருவாக்குவது
  4. வங்கி கணக்கில் வந்த பண பரிவர்த்தனையை வராதது போல் சித்தரிப்பது
  5. முதலீடு அல்லது சேமிப்பு ரீதியில் உங்களுக்கு வந்திருக்கும் சர்வதேச பண பரிவர்த்தனைகளை மறைப்பது இவை அனைத்தும் அபராதத்திற்குரிய செயல்களாக கருதப்படும்.

கவனம் தேவை:

பிக்சட் டெபாசிட், போஸ்ட் ஆபீஸ் முதலீடுகள், சேமிப்பு வங்கி கணக்கு மூலமாக வரும் வட்டி, கிஷான் சேமிப்பு திட்டங்கள், சவரன் கோல்ட் பாண்ட், கடன் பத்திரங்கள் மூலமாக கிடைக்கும் லாபம் ஆகியவற்றையும் ரிட்டன் தாக்களின் போது கணக்கில் கொண்டு வர வேண்டும்

தாமதமான வருமான வரி ரிட்டன் தாக்கல்:

வருமான வரிக்கான ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் வருமானம் ரூ. 5 லட்சத் திற்கும் மேல் உள்ளவர்கள் ரூ. 5000 அபதாரம் கட்டியும், ரூபாய் 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ரூ.1000 அபராதம் கட்டியும் ரிட்டன் தாக்கல் செய்யலாம்.

அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூ.10,000 அபராதம் கட்டி தாக்கல் செய்ய வேண்டும்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.